விசை-16
விசை-16 அடித்துப்பிடித்து இறைவியின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தான், முகில்வண்ணன். அவனுக்கு அழுகையாய் வந்தது. கண்ணில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது. வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தவன் அலைபேசி அதிர, இறைவிதான் அழைப்பதோ என்று பதைபதைப்பாய், யார் அழைக்கின்றார்கள் என்றும்கூடப் பார்க்காது, “இரா.. ம்மா.. டேய்..” என்று பதறினான். அதில் இறைவிக்கு ஏதோ பிரச்சினையோ என்று அஞ்சி, “டேய் நான் வேலுடா.. என்னாச்சு?” என்று அய்யனார் கேட்க, “அ..அத்தான்..” என்றவன் உடைந்துபோய் அழுதே விட்டான். முகில் இப்படியெல்லாம் உடைந்து அழுவதை அய்யனார் பார்த்ததோ கேட்டதோ இல்லை. “டேய்.. முகில்.. என்னாச்சுடா?” என்று அய்யனார் கேட்க, “அ..அத்தான்..” என்று அழுதானே தவிர ஏதும் பேசவில்லை. “என்னாச்சு முகில்? முதல்ல நீ எங்க இருக்கனு சொல்லு” என்று அய்யனார் கேட்க, “இ..இரா வ்..வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் அத்தான்” என்றான். “என்னாச்சுடா? அ..அவளுக்கு எதும் பிரச்சினையா?” என்று அய்யனார் கேட்க, அவன் நெஞ்சம் அத்தனை பதற்றத்தை உணர்ந்தது அக்கேள்வியில். “நா..நானே என் இராவ ஹ..ஹர்ட் பண்ணிட்டேன் அத்தான்” என்று கதறலாய் மொழிந்தவன், தன் கண்ணீரை அழுந்த...