விசை-32 (இறுதி அத்தியாயம்)
விசை-32 நான்கு வருடங்களுககுப் பிறகு… “இதுக்குத்தான் அத்தனை முறை சொன்னேன். இறைவிகிட்ட கான்டிராக்ட் தரவேணாம்னு. எங்க கேட்குறீங்க நீங்க?” என்று மதி சப்தம் போட, அவள் திட்டுகளையெல்லாம் ஒரு பொருட்டாய் எடுக்காமல், அவள் காலடியில் அமர்ந்து அவள் புடவை மடிப்புகளை சீர் செய்துக் கொண்டிருந்தான், முகில்வண்ணன். “கொஞ்சமாது என் பேச்சைக் கேட்குறீங்களா மாமா? பாருங்க.. இன்னும் அவ வரலை. வேலை வேலைனு ஓடுறா” என்று மதி மேலும் சண்டை பிடிக்க, மெல்ல எழுந்து நின்றவன், அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டு, அவள் கன்னத்தில் முத்தமிட்டான். “எ..எனக்கொன்னும் வேணாம்” என்று அவள் கன்னத்தைத் துடைத்துக் கொள்ள, மீண்டும் ஒரு முத்தம் வைத்தான். மீண்டும் அவள் துடைத்துக் கொள்ள, “வேணாம்னா போ” என்றபடி முன்னே வந்து, மண்டியிட்டு அவள் மனிவயிற்றில் முத்தம் வைத்தான். அவள் மணிவயிற்றில் துயிலிருக்கும் குழந்தை எட்டி உதைக்கவும், அவனை முறைத்துப் பார்த்தவள், “என் புள்ளைக்கும் வேணாமாம்” என்க, பக்கென்று சிரித்த முகில், “அவன் பதிலுக்கு அப்பாவ செல்லமா தட்டித்தரான்டி.. உனக்குத் தெரியாது அதெல்லாம்” என்றான். “ஆமா ஆமா.. எனக்குத் தெரியாது” என்று அ...