திருப்பம்-02 அந்த அழகிய அளவான வீட்டில் தனதறையில் கண்ணாடி முன் அமர்ந்துகொண்டு படபடக்கும் மனதை சமன் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள், சங்கமித்ரா. அவளுக்கு நகைகளை அணிவித்துக் கொண்டிருந்த சங்கீதா, “ஓய் சங்கு.. என்னடி டல்லடிக்குற?” என்று கேட்க, “பொண்ணு பாக்கும்போது உனக்கு எப்படியிருந்துச்சு சங்கீ?” என்று கேட்டாள். அவள் கேள்வியில் கிளுக்கிச் சிரித்த சங்கீதா, தன் வயிற்றைத் தாங்கிபிடித்தபடி எழுந்து அவள் முன் வந்து அமர்ந்து, அவள் கையில் தங்க வளைகளை அடுக்க, “ப்ச்” என்று அக்காவை முறைத்தவள், புடவைககுத் தோதாக இரண்டு நாட்களாய் அவள் தேடி அலைந்து வாங்கிய கண்ணாடி வளையலை எடுத்து வந்தாள். “சங்கு, அம்மா திட்டுவாங்க” என்று சங்கீதா கூற, “எனக்கு இதான் பிடிச்சிருக்கு சங்கீ” என்றவள், தங்கத்தாலான நான்கு பட்டை வளைகளை எடுத்து, இரண்டு வளைகளுக்கு நடுவே கொஞ்சம் கண்ணாடி வளையலை வைத்து, கைகளில் அணிந்தாள். சங்கீதா தங்கையை புன்னகையாய் பார்க்க, “எப்படி சங்கீ அத்தான ஓகே பண்ண?” என்று கேட்டாள். அப்போதே உள்ளே நுழைந்த அவிநாஷ், “ஏன் பாப்பா? உங்கக்கா என்னை ஓகே பண்ணதுல உனக்கென்ன வருத்தம்?” என்று கேட்க, “ஒரு நல்ல மனுஷன எங்...
Comments
Post a Comment