வலி, வலி வழி புரியும்!

மருத்துவமனையில் கண்களில் வழியும் இன்பவெள்ளத்துடன் ஓய்ந்து படுத்துக் கிடந்தாள், தமிழினி. நினைவுகள் சில வருடங்களுக்கு முன் இதே மருத்துவமனையில் சுற்றத்தாரின் கதறலுக்குக் காரணமாக படுத்திருந்தது நினைவு வந்தது. காரணம், தான் காதலித்தவன் குணத்தில் பூஜ்ஜியம் பெற்றவன் என தெரியவந்த பின் உருவான தாங்க முடியாத வலி… தமிழ்வேந்தன் இதழினியின் ஒற்றை வாரிசே தமிழினி. திருமணம் முடிந்து ஐந்து வருடம் குழந்தையின்றி தவித்து, ஊர் பேச்சு உலகப்பேச்செல்லாம் வாங்கி, ஏதோ ஜென்மத்தில் செய்த புண்ணியமாக பெற்ற பிள்ளையே தமிழினி. பாசம் மொத்தமும் மகளுக்கே எனக் கொட்டிக் கொட்டி வளர்த்த மகளுக்கு நல்லொழுக்கமும் பண்புகளும் கற்றுத் தந்தே வளர்த்தனர். மகள் பேச்சுக்கு வீட்டில் மறுபேச்சில்லை. அவளது காதலும் அப்படியே. கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் துளிர்விட்ட காதலை மூன்றாம் ஆண்டின் இறுதியில் உணர்ந்தவள் உடனேயே அதை தன் வீட்டிலும் கூறி இருந்தாள். 'படிப்பை முடி உன் இஷ்டம் போல் செய்கின்றோம்' என புன்னகையுடன் கூறிய பெற்றோரை கட்டியணைத்து மகிழ்ந்தாள். ஆனால் அன்று..! அவளது கல்லூரி வாழ்வின் இறுதியாண்டில் அவளது காத...