விசை-24
விசை-24 உலகமே இருண்டு, வாழ்க்கையே முடிந்துவிட்டதைப் போல் அமர்ந்திருந்தாள் இறைவி. இருந்த இடம்விட்டு அசையக்கூடத் திராணி இல்லாதவளாய் இருந்தாள். அவள் அருகே அமர்ந்து மதி மற்றும் தான்யா சொல்லிய ஆறுதல் எல்லாம் அவள் செவியை எட்டியாதாகக்கூட அவள் காட்டிக்கொள்ளவில்லை. மரத்துப்போன அவள் உடலில், கண்கள் மட்டும் அதிவேகமாய் தன் பணி செய்து கண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தது. “யாரு வந்து கூப்டாலும் விட்ருவீங்களா? இதுதான் நீங்க ஸ்கூல் நடத்துற லட்சனமா சார்?” என்று அய்யனார் வெறி பிடித்தவன் போல் கத்த, “சார்.. அந்த பொண்ணைக் கூப்பிட ஒவ்வொரு நேரம் ஒவ்வொருத்தர் வருவாங்க. வர்ற எல்லாரையும் எப்படி எங்களால நினைவு வச்சுக்க முடியும்? சக்திகிட்ட கேட்கத்தான் செய்தோம். அவதான் தெரியும்னு சொன்னா” என்று அந்த ஆசிரியர் கூறினார். “இதென்னங்க முட்டாள்தனமான பதிலா இருக்கு? நாங்க ஒவ்வொருத்தர் வந்தாலும் ஒவ்வொரு முறையும் எங்க குடும்ப படத்தைக்காட்டி உறுதி செய்துட்டுத்தானே கூட்டிட்டுப்போறோம்? எங்க புள்ளைக்கு எதாவதுனா நீங்க பதில் சொல்லுவீங்களா?” என்று முகில் கத்தி சப்தமிட, பள்ளி முதல்வருக்கு விழி பிதுங்கியது. “என் புள்ளை எனக்கு வேணுங்...