விசை-29
விசை-29 தனது அலைபேசியில் இறைவி இருக்கும் இடத்தைக் கண்காணித்தபடியே சென்றவன், ஒரு பேருந்து நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தினான். கூரைக்கு அடியில், முற்றும் நனைந்த நிலையில், தனது ஈரத் துப்பட்டாவையே போர்த்திக் கொண்டு, கொஞ்சம் பயத்தோடும், பதட்டத்தோடும் நின்றுகொண்டிருந்த இறைவி, முகிலின் வண்டியைக் கண்டதும் ஆசுவாசம் ஆனாள். உள்ளிருந்து குடையோடு வெளியே வந்த அய்யனார், அவளை முறைத்தபடியே வந்து, “ஃபோன் பண்றேன்ல அத்தனை முறை? எடுத்து பேச என்னடி உனக்கு?” என்று கடிந்துகொள்ள, அந்த கோபத்தில் உணரப்பெற்ற அக்கறை அவள் உள்ளமெங்கும் தித்திப்பாய் தித்தித்தது. “பதறிட்டு வரேன் என்னவோ ஏதோனு.. ஒரு கால் அட்டென்ட் பண்ணி பத்திரமா இருக்கேன்னு சொன்னா என்ன?” என்று அய்யனார் கேட்க, “ஃபோன் கீழ விழுந்துடுச்சு.. டிஸ்ப்ளே வேலை செய்யலை. அதான் உங்க கால் அட்டென்ட் செய்ய முடியலைப்பா” என்றவள், “அதான் சாயங்காலம் லேட் ஆகவுமே உங்களுக்கு லொகேஷன் அனுப்பி வச்சிருந்தேன்ல?” என்று கேட்டாள். “இருக்கட்டும்.. வேற யார்கிட்டயாவது வாங்கிப் பேசிருக்கலாம்ல?” என்றபடி, அவள் தோள் பையை வாங்கிக் கொண்டவன், “பயந்துட்டேன் இறைவி” என்று கூற, அவள் இதழில் ம...