திருப்பம்-103
திருப்பம்-103
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர், சங்கமித்ராவும் வளவனும்.
தான் மீண்டும் மயங்கி விழுந்ததால் தான் மருத்துவமனைக் கூட்டிச் சென்று, வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றான், என்று நினைத்த சங்கமித்ராவிற்கு வீட்டிலிருந்து ஒருவர் மாறி மற்றவர், அவன் அலைபேசிக்கு அழைத்தும் வளவன் எடுக்காமல் அழைப்பைத் துண்டித்துக் கொண்டிருப்பது, வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது.
கார்த்திகாவிடமிருந்து அவன் அலைபேசிக்கு அழைப்புவர,
ஒற்றைக் கையால் மகிழுந்தின் திசைமாற்றியைப் பற்றிக் கொண்டு மற்றையக் கரம் நீட்டி அழைப்பைத் துண்டித்தான்.
பெண்ணவள் அவனைக் கேள்வியாய் நோக்க,
அதை உணர்ந்தபோதும் அவன் பதில் உறைத்தான் இல்லை.
மகிழுந்து சில நிமிடங்களில் வீட்டை அடைய,
அனைவரும் அவன் வாகன சப்தத்திற்கே வாசலுக்கு ஓடி வந்தனர்.
“ஏம்லே.. ஆரையும் வரவும் வேணாமுனுட்ட. அம்புட்டு மொற கூப்பிடுதோம் ஏம்லே கட் பண்ணி விடுற? கோம்பயாலே ஒனக்கு?” என்று விக்ரமன் சப்தம் போட,
அமைதியாய் வண்டியிலிருந்து இறங்கியவன், அவளை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
சங்கமித்ரா ஒன்றும் புரியாது விழிக்க,
“டாக்டரு என்னம்லே சொன்னாவ? ஏம் இங்கனயே பாக்காம ஆஸ்பத்ரி வரச்சொன்னாவ? ஏத்தா ஏம் இவேம் கம்மினே இருக்கியாம்?” என்று வடிவேல் கேட்க,
'தெரியலை' என்பதாய் தலையசைத்தவள், ‘மயக்கம் போட்டதுக்கு டிரிப்ஸ் தான் போட்டு அனுப்பினாங்க' என்று தன் கரத்தைக் காட்டினாள்.
“எய்யா வளவா.. ஏம்மக்கா மிண்டாதிருக்க?” என்று சுயம்புலிங்கம் கேட்க,
“வளவா..” என்று தெய்வா அழைத்தார்.
“மித்ரா ரூமுக்குப் போ” என்று அவன் கூற,
குழப்பமாய் அவனைப் பார்த்தாள்.
“போனு சொன்னேம். காது கேக்குது தான?” என்று அவன் அதட்டலாய் கேட்க,
அனைவரையும் குழப்பமாய் பார்த்தவள் மாடிக்குச் சென்றாள்.
“சாமி அம்மா தெரியாத..” என்று தெய்வா ஏதோ பேச முற்பட,
கையெடுத்துக் கும்பிட்டவன், “நாயேதாது பேசிடுவேனோனு அச்சமாருக்குதும்மா. தயசெஞ்சு வுட்டுடுங்க” என்று கூறினான்.
கீழே நேரே சமையலறை சென்றவன் தட்டு நிறைய உணவை எடுத்துக் கொண்டு மாடி நோக்கிச் செல்ல,
வீட்டாட்கள் அனைவரும் குழப்பமும் பயமுமாய் இருந்தனர்.
விக்ரமன் தானும் மேலே செல்ல முற்பட,
“இரும்லே.. தங்கபுள்ளைக்குத்தேம் கொண்டோரியாம். உங்கி முடிக்கட்டும். போயி கேப்பம்” என்று வடிவேல் தடுத்து நிறுத்தினான்.
“என்னம்லே மிண்டாது போறியாம். அந்த புள்ளைக்கும் என்ன சொன்னாவனே தெரியலங்குது. ரொம்ப அச்சமாருக்குதுலே” என்று விக்ரமன் வருத்தமாய் கூற,
“செத்த சும்மாருலே. நீயா என்னமாது ரோசிக்காத. என்னனு கேப்பம்” என்று சமாதானம் செய்தான்.
மேலே அறைக்குள் சோர்வாய் அமர்ந்தவளுக்கு அத்தனைச் சோர்வையும் மீறி மனம் லேசாய் உணர்ந்தது.
அத்தனை நாட்கள் உள்ளே சுமந்துக் கொண்டிருந்த குப்பைகள் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்திவிட்டதாய் உணர்ந்தாள். அத்தனை இடர்களையும் உடைத்துக் கொண்டு தனக்காகவென்று தானே பேசுவதில் தான் எத்தனை சுதந்திரம் உள்ளது? என்பதை பேசிய பின்பு தான் மனமார உணர்ந்தாள்.
போகட்டும் சிறு வருத்தம் தானே தனக்கு என்று நம்மை நாமே வலிக்குப் பழக்கப்படுத்திக் கொள்வதுதான் இங்கு அதிகம். உலகில் அனைவருக்கும் ஒரே மனம் தான் ஒரே வலிதான் என்பது உணர்ந்து தனக்காக தான் நின்று வாதாடுவதில் தான் எத்தனை திருப்தி உள்ளது? அதை உளமார உணரப் பெற, அத்தனை இதமாய் இருந்தது.
அறை கதவைத் திறந்துக் கொண்டு வளவன் வர,
'என்னாச்சு? டாக்டர் என்ன சொன்னாங்க?’ என்று அவள் குழப்பமாய் சைகை செய்தாள்.
“மொதல்ல சாப்புடு” என்றவன், அவளுக்கு உணவை ஊட்ட,
மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.
தட்டிலிருப்பதையெல்லாம் அவன் ஊட்டி முடிக்க, சென்று கைகளைக் கழுவிக் கொண்டு வந்தவன் அவளுக்கு பருக நீர் கொடுத்தான்.
அதையும் குடித்து முடித்தவள், ‘என்னாச்சுங்க?’ என்க,
“ஏன்டி இம்புட்டு நாளா எங்கிட்டச் சொல்லல?” என்று பரிதாபமாய் குரல் உடையக் கேட்டான்.
அவனது உடைந்தக் குரல் அவளை என்னவோ செய்தது.
அவன் கன்னத்தில் கரம் வைத்தவள், ‘சொல்லக்கூடாதுனு இல்ல. என்னாலயே அதையெல்லாம் ஜீரனிக்க முடியலை. அப்ப இருந்த மனநிலை உங்களுக்கே தெரியும்ல? எனக்கு அதைப்பற்றி பேசவே என்னவோபோல இருந்தது. அத்தனை சீக்கிரம் என்னால அதை உங்ககிட்ட சொல்லிக்க முடியலை' என்றவள் வளைகாப்பு அன்று அவள் கேட்ட பேச்சு வார்த்தைகளை சைகை மொழியில் புரியவைத்தாள்.
அவன் கண்கள் இன்னும் சிவந்து கண்ணீர் சுரந்தது.
தன்னவள் இவற்றையெல்லாம் கேட்டு எத்தனைத் துடித்திருப்பாள்? என்று யோசிக்கவே அவனுக்கு கத்தி அழவேண்டும் போலிருந்தது.
'என்னமோ ரொம்ப டம்ப் ஆன ஃபீல். இல்லை இதெல்லாம் தேவையில்லைனு என்னை நானே மோல்ட் பண்ணத்தான் முயற்சி பண்ணிட்டு இருந்தேன். இதெல்லாம் கேட்கவும் என்னமோ விட்டுப்போன உணர்வு. இன்னும் இங்கயே இருந்து இவங்க பேசுறதையும் கேட்டுகிட்டு என்னை என்னால தேத்த முடியாதுனு தோனுச்சு. எனக்கு என் மனநலம் முக்கியமாச்சே' என்று சைகை செய்தவள் அவன் கண்கள் பார்த்து, ‘என் சந்தோஷத்துலயும் நிம்மதிலயும் உங்க சந்தோஷமும் நிம்மதியும் அடங்கிருக்கு. அதுக்காகவாது நான் எப்பவுமே சந்தோஷமாருப்பேன்னு கல்யாணமான புதுசு அத்தான்கிட்ட சொன்னேன். அதை காப்பாத்திக்கனும்ல நானு?’ என்று சைகை செய்ய,
“மித்ரா..” என்று அழுதபடி அவளை அணைத்துக் கொண்டான்.
சங்கமித்ரா கண்களும் கலங்கிவிட,
“சாரிடி” என்று முற்றுமாய் உடைந்துருகிக் கூறினான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் பார்வையில் சிறு கண்டிப்பு.
“ப்ளீஸ்டி.. நீங்க சாரி கேக்காதீயங்காத.. குத்த உணர்ச்சில செத்தே போயிடுவேம்” என்று அவன் கூற,
கண்ணீர் பொங்கி வழிய அவனைப் பார்த்தவள், அவன் கன்னகளைத் தன் கரத்திற்குள் பொத்திக் கொண்டு, அவன் இதழை சிறை செய்தாள்.
ஆழ்ந்த அமைதியான இதழ் சஞ்சரம்…
இருவரின் ரணங்களின் மேலும் குளிர்ந்த எண்ணையை மயிலிறகுக் கொண்டு வருடுவதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது, அம்முத்தம்…
பெண்ணவள் மெல்ல அவனை விடுவிக்க,
“ஓம்பக்கட்டுப் புரியுதுடி.. அ..ஆனா எங்கிட்ட முன்னமே சொல்லிருக்கலாமுல்லனு நெனக்காம இருக்க முடியல” என்று கூறினான்.
அவனை மன்னிப்பாய் ஒரு பார்வை பார்த்தவள், ‘எனக்கு என்ன சொல்லனு தெரியலைங்க இதுக்கு' என்று சைகை செய்ய,
“எம்மேல கோவமே இல்லயாடி?” என்று கேட்டான்.
ஏதோ தவறு செய்து அன்னையிடம் திட்டு வாங்கிக் கொண்டு, அழுதபடியே அன்னையை சமாதானம் செய்யவந்த குழந்தையைப் போல் அவள் முன் அமர்ந்திருந்தான்.
அவள் கரம் பற்றிக் கொண்டு அவன் அக்கேள்வியைக் கேட்க,
அவன் சிகையும் முகமும் வருடியவள், ‘எதுக்குக் கோவப்படனும்?’ என்றாள்.
பெரும் விசுமப்லுடன் அவள் கரத்தில் அவன் முகம் புதைக்க,
அவன் சிகைக்குள் கரம் நுழைத்துக் கோதியபடி அவனுக்குத் தட்டிக் கொடுத்தாள்.
அவன் தாடை பற்றி முகம் நிமிர்ந்தியவள், ‘சங்கமித்ரா முகத்துல சின்ன சுறுக்கம் வந்தாகூட கண்டுபிடிச்சு அதோட காரணத்தை அழிக்க நினைக்குற திருமால் இருக்க, சங்கமித்ராவுக்கு யாரோ பேசுற பேச்சுக்கு அவரை திட்ட தோன்றுமா? சத்தியமா அத்தனை மாசமும் அவங்களுக்கு எம்மேல இருப்பது சின்ன படித்தமின்மைனுதான் பொறுமையா இருந்தேன். அது இல்லைனு புரிஞ்சுடுச்சு. இதுக்கு மேலயும் என்னால அமைதியா இருக்க முடியலை' என்று சைகை செய்ய,
அவளையே வைத்த விழி அகற்றாது பார்த்தான்.
அவன் கண்ணீரைத் துடைத்தவள், ‘ஆனா இப்பவும் உங்களைத் தனியா வாங்க போயிடலாம்னு கூப்பிட மாட்டேன்' என்று சைகை செய்ய,
அவனுக்கு பெரும் வலியாக இருந்தது அவள் வார்த்தைகள்.
'அவங்க ஒருத்தங்களுக்குத்தான் இந்த வீட்டுல உரிமை இருக்கா என்ன? இத்தனை நாள் என்னைப் பேசினாங்க தானே? பொருத்து இருந்தேன் தானே? என்னை ஏத்துக்க வேண்டவே வேண்டாம். ஆனா என்னை சகிச்சுட்டு இருக்கச் சொல்லுங்க. இருந்துதான் ஆகனும். இது என் புருஷனோட வீடு. இங்க எனக்கு இருக்க உரிமை இருக்கு. என்னை ஏத்துக்க முடியலைனா அவங்களுக்குத்தான் மூனு பொண்ணுங்க இருக்காங்கள்ல? மாசம் ஒரு பொண்ணு வீட்ல இருந்துக்க சொல்லுங்க’ என்று அவள் சைகை செய்ய,
“மித்ரா..” என்றபடி அவளை அணைத்துக் கொண்டான்.
அவன் உடல் அழுகையில் குலுங்கியது.
இத்தனைக்குப் பிறகும், அவள் தனக்காகத்தானே யோசிக்கின்றாள்? ஏன்? இத்தனை பேச்சுக்கள் வாங்கிய பிறகும் ஏன்? அப்படியென்ன பொல்லாத காதலிது? அப்படியென்ன பைத்தியக்காரத்தனமானக் காதலிது? அத்தனைக் காதலுக்கு தான் என்ன செய்துவிட்டோம்? என்றெல்லாம் எண்ணி அவன் கதற,
அவனை மாரோடு அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்தியவள், ‘மித்ராவுக்காக திருமால் என்ன செய்யலை?’ என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் அகம் உணர்ந்ததைப் போல் அவன் அவள் முகம் நோக்க,
கண்ணீரோடு புன்னகைத்தவள், தன் நெஞ்சத்தில் விரல் வைத்துக் குத்தி, ‘இங்க திருமால் ஆழமா பதிஞ்சுட்டார். அங்க மித்து பதிஞ்சதைப் போல. திருமால் மித்துக்காக என்ன செய்யாம இருந்துட்டார்? காதல்ல ஒரு பக்கம் மட்டுமே அன்பிருந்தாதான் வலி.. ஒருபக்கம் பத்து கொடுத்தாலும்போதும் மீதி தொன்னூரையும் இன்னொரு பக்கம் கொடுத்து ஈடுகட்டிக்கூட அத்தனை அழகா காதலிக்கலாம். அப்படியிருக்க, நம்ம ஃபிஃப்டி-ஃபிஃப்டி. அப்படியொரு ஆத்மார்த்தக் காதலை விட்டுட்டுப் போக மனசு வருமா? நினைச்சுத்தான் பார்க்க முடியுமா?’ என்று புரியவைக்க,
மெல்ல அழுதபடியே தலையசைத்தான்.
எப்போதும்போல் ஆற்றுப்படுத்த வந்தவனுக்கு அவளே ஆறுதலாய் மாற,
அவனை அணைத்தபடி படுத்தவள் அவன் நெற்றியில் மெல்லிய முத்தம் பதித்துத் தன் தேறுதல்களைக் கூறத் துவங்கினாள்.
காமம் கலக்காத கலவியாய், மோகம் மிதக்காத மோகனமாய், தாபம் தெளிக்காத தேனுணர்வாய், ரணங்களின் மிச்சங்களை இதமாய் கலைத்திடும், அன்பின் ஆலாபனை ஒன்றை நிகழ்தத் துவங்கினாள், பெண்.
மென்மையான முத்தங்களின் சத்தங்கள் வலிமை பெற,
அவளிடமிருந்து பதறி நகர்ந்தவன், தன்னை மருட்சியுடன் பார்ப்பவள் விழிகளை ஏறிட்டான்.
“வே..வேணாம்டாமா” என்று குரல் தந்தியடிக்க அவன் கூற,
அவள் கருமணிகள் உருண்டோடின.
அதன் ஓட்டத்தில் தெரித்தக் குழப்பம் அவனை வந்தடைய,
அவளை மென்மையினும் மென்மையாய் அணைத்துக் கொண்டு அவள் காதோரம் தன் மூச்சுக்காற்று மோத,
சேலை மறைக்காத அவறது வயிற்றில் மெல்ல கரம் பதித்தான்.
அவன் தீண்டலில் உடல் சிலிர்த்துப் போனவள், குழப்பமும் ஆர்வமுமாய் அவனை நோக்க,
கண்ணீர் இமைகளை நனைத்துத் துளித் துளியாய் கன்னத்தில் இறங்க அவளைப் பார்த்தவன், ‘ஆம்’ என்பதாய் தலையசைத்தான்.
அதில் விழிகள் விரிய அதிர்ந்து போனவள், அவனிடமிருந்து எழுந்து அவன் முகம் பார்த்து, ‘நிஜமாவா?’ என்க,
அவள் கன்னம் பற்றியவன் கண்களில் கண்ணீரும் இதழில் புன்னகையுமாய் தலையசைத்தான்.
முற்றும் அதிர்ந்துபோய் அவனைப் பார்க்க,
“சத்தியமாத்தாம்டி சொல்லுதேம்” என்றான்.
கைகள் நடுநடுங்க தன் மணி வயிற்றைத் தொட்டுப் பார்த்தவள், ‘எப்போருந்து?’ என்று அவனைக் கேள்வியாய் நோக்க,
அவன் கூறிய பதிலில் முற்றுமாய் அதிர்ந்து போய் அரண்டு எழுந்தேவிட்டாள்.
Comments
Post a Comment