2.அந்தமற்ற ஆதரமே

 அத்தியாயம்-02



கலகலப்பான சிரிப்பொலியே அந்த இடமெங்கும் ஒலித்தது! தன் கையில் நீரை பந்துபோல் உருட்டிப் பிடித்துக் கொண்ட கார்டிலியா "அக்வா" என்றபடி அதை வீசி எறிய, 


"டௌஸ் (douse)" என்று பதில் மந்திரம் போட்டு அந்த நீரை அவள் மீதே வீசியிருந்தான், ஃபோர்ட் (Ford). 


நீர்ப்பந்து வந்து வீசிய வேகத்தில் இரண்டடி பின்னே சென்று வீழ்ந்தவள், "ஆஹா ஃபோர்ட்.. ஆனாலும் உங்கக் காதலி மேல உங்களுக்கு கருணையே இல்ல" என்று கூற, 


வாய்விட்டு சிரித்தவன், "வேவ்" என்று மந்திரச்சொல் உதிர்த்ததில் ஓர் அலை உருவாகி அவளை தூக்கிக் கொண்டு வந்து அவனிடம் சேர்த்தது. 


அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு முத்தமிட்ட ஃபோர்ட், "காதல் மனைவி சண்டை கலைகள்ல கொஞ்சம் மக்கா இருக்காளே. அதனால பாடம் சொல்லிக் கொடுக்கும்போது கண்டிப்பு இருப்பதுல தப்பில்லை" என்று கூற, 


“என் காதல் கணவர் காதலில் மக்கா இருக்காரே! அப்போ நானுமில்ல கண்டிப்பா இருக்கனும்?" என்றவள் அவன் முகம் பற்றி கன்னத்தினை அழுந்த கடித்து வைத்தாள்.


"ஆ.." என்றபடி அவளைக் கீழே விட்ட ஃபோர்ட் "வரவர உனக்கு விளையாட்டு கூடிபோச்சு கார்டிலியா" என்று கூற, 


"ஆஹா.. விளையாட்டுக் கலைகள் கத்துக்காமலே வந்துடுச்சு பார்த்தீங்களா ஃபோர்ட்" என்றுவிட்டு கண்சிமிட்டினாள்.


அதில் சிரித்துக் கொண்ட ஃபோர்ட் "தப்பில்லை ஃபேர்ரி" என்று அவளை அணைத்துக் கொள்ள, 


அவர்கள் முன் இரண்டு பனி கத்திகள் வந்து விழுந்தன. 


அதில் இருவரும் திடுக்கிட்டுத் திரும்ப, "பயிற்சி நேரத்துல இப்படி வேற பயிற்சி எடுத்துகிட்டு இருந்தா இந்த அலாஸ்காவுக்குப் பிடிக்காது" என்று கூறினாள், அலாஸ்கா.


அதில் வாய்விட்டு சிரித்த கார்டிலியா, "ஏ அலாஸ்கா.. நிஜமா சொல்லு. உனக்கு ஒரு ஆள் கிடைக்கலையேனு பொறாமைல தானே சொல்ற" என்று கூற, 


தோழி தன்னைக் கண்டுகொண்டதில் வெட்கமடைந்து "ஆமா ஆமா.. படுறாங்க பொறாமை" என்று சமாளித்தாள்.


அதில் சிரித்துக் கொண்ட ஃபோர்ட் "உனக்கோ யாரையும் காதலிக்க வரலை, அப்ப லார்ட் ஜோயலைப் பார்க்கச் சொல்லிட வேண்டியது தானே?" என்று வினவ, 


"லார்ட் பார்த்து கொடுத்த வரனை வேண்டாம்னு சொல்லிட்டா ஃபோர்ட்" என்று கார்டிலியா கூறினாள்.


"ஏன் அலாஸ்கா?" என்று ஃபோர்ட் வினவ, 


"எனக்கு அவர் மேல எந்த ஒரு அபிப்ராயமும் வரலை. எனக்கு உங்களை, தோரா (Thora), ரெய்டன் (raiden), ஐலா அன்ட் ஆலிஸ் போல காதலிச்சு கைபிடிக்கனும்னு ஆசை" என்றாள்.


அப்போதே அங்கு தோரா தன் காதல் கண்ணாலனான ரெய்டனுடன் வந்து சேர, 


"என்ன எங்களைப் பத்தினப் பேச்சு ஓடுது" என்றான் ரெய்டன். 


"ஜஸ்டு மிஸ்ஸு ரெய்டன்.. நான் மட்டும் தன்டர் ஃபேரியா இருந்திருந்தேன், உங்கள தான் தூக்கிட்டு போய்ருப்பேன்" என நக்கலாக அலாஸ்கா கூறியதும், அவளருகே இரண்டு மின்னல்களை அனுப்பி வெடிக்க வைத்த தோரா, "பார்த்துப் பேசு அலாஸ்கா" என்றாள்.


அவள் கோபத்தில் அங்குள்ள அனைவரும் சிரிக்க, 


அவளை வந்து கட்டியணைத்த அலாஸ்கா, "என் தோழிக்கு இவ்வளவு கோபம் ஆகாது" என்றாள்.‌ 


அதில் அவளை முறைக்க முயன்ற தோரா தானும் சிரித்திட, 


தோராவை தன்னோடு இழுத்துக் கொண்ட ரெய்டன், "ம்ஹும்.. என் தோராவை என் முன்னாடியே கட்டிப்பிடிக்க உனக்கு உரிமையில்ல அலாஸ்கா" என்றான்.


மேலும் அங்கு சிரிப்பொலி பரவ, 


"ச்ச.. நான் ஐலா, சைரா அன்ட் அடாமிய ரொம்ப மிஸ் பண்றேன். அவங்க எப்ப வருவாங்கனு இருக்கு" என்று கார்டிலியா கூறியதை அனைவரும் ஆமோதிப்பாகத் தலையசைத்தனர்.


அது பாரடைஸ்!!!


கனடாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மக்கள் வாழாத தீவான, டேவோன் தீவிலியே அந்த சொர்க பூமி அமைந்துள்ளது. 


மக்கள் வசிக்காத உலகப்பகுதிகளில் மிகப் பெரிய தீவான டேவோன் தீவில் அமைந்திருக்கும் இந்த மாயாஜால உலகத்தில், ஆறு மாய பிரிவுகளை சேர்ந்த ஃபேரிகள் வாழ்ந்து வருகின்றனர்.


'வாடர் ஃபேரீஸ்' என்ற இணத்தைச் சேர்ந்த தேவதைகளின் பெயரைப் போலவே அவர்களது மாயாஜாலங்கள் நீரை வைத்தே அமையும். 


'டால்பின்' என்ற நீர்வாழ் உயிரினமே, அவர்களது இணத்தைச் சேர்ந்த தலைமை பிராணி.


'ஸ்னோ ஃபேரீஸ்' என்ற இணத்தைச் சேர்ந்த தேவதைகள், பனியைக் கொண்டு தங்கள் மாயாஜாலக் கலைகள் கற்றுத் தேர்ந்தவர்கள். 

'வெள்ளை சிங்கம்' என்ற உயிரினமே இவர்களது தலைமை பிராணி.


'வின்ட் ஃபேரீஸ்' என்ற இணத்தைச் சேர்ந்த தேவதைகள், காற்றைக் கொண்டு தங்கள் மாயக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள். 'யுனிகார்ன்' என்ற பறக்கும் குதிரையே இவர்களின் தலைமைப் பிராணி.


'ஃபயர் பேரீஸ்' என்ற இணத்தைச் சேர்ந்த தேவதைகள், தீயைக் கொண்டு தங்கள் மாயாஜாலக் கலைகள் கற்றுத் தேர்ந்தவர்கள். 'ஸ்மாக் டிராகன்' என்ற உயிரினத்தைத் தங்கள் தலைமை பிராணியாகக் கொண்டுள்ளனர்.


'லேன்ட் ஃபேரீஸ்' என்ற இணத்தைச் சேர்ந்த தேவதைகள், பூமி மற்றும் செடி கொடிகளைக் கொண்டு தங்கள் மாய வித்தையைப் பயன்படுத்துபவர்கள். 'ரேகல் டிராகன்' என்ற உயிரினத்தைத் தங்கள் தலைமை பிராணியாகக் கொண்டுள்ளனர்.


'தன்டர் ஃபேரீஸ்' என்ற இணத்தைச் சேர்ந்த தேவதைகள், இடி மற்றும் மின்னலைக் கொண்டு தங்கள் மாயவித்தைகளை உபயோகிப்பர். 'பனி நரிகள்' என்ற உயிரினத்தைத் தங்கள் தலைமை பிராணியாகக் கொண்டுள்ளனர்.


பாரடைஸ் உலகம் லார்ட் விக்டோரியா வம்சத்தினை சேர்ந்த, லார்ட் செபாஸ்டின் விக்டோரியா என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு இயற்கை ஆக்கங்களுக்கும் ஒரு மாயாஜால தேவதைகளை படைத்தவர், ஒவ்வொரு வம்சத்தின் ஆற்றலையும் ஒவ்வொரு கற்களில் பூட்டி வைத்தார்.


அந்த ஆறு கற்களையும் ஒரே கோலில் பொருத்தி அதன் பொருப்பை தனது வம்சத்தினரின் பேரில் ஒப்படைத்தார். 


லார்ட் விக்டோரிய வம்சத்தினை சேர்ந்த தற்போதைய தலைமுறையினர், விக்டோரியா ஜோயல் மற்றும் விக்டோரியா காஸ்மோ என்ற இரட்டையர்கள்.


உருவ ஒற்றுமை அற்ற இந்த இரட்டையர்களில் பாரடைஸிற்கு அடுத்தத் தலைமுறையாக யார் பொறுப்பேற்பது என்ற பேச்சுவார்த்தைத் துவங்கியதிலிருந்தே பகை முட்டிக் கொண்டது. 


காஸ்மோவின் குணமும், பொறுப்பற்ற தன்மையும் ஜோயலுக்கு எப்போதுமே ஓர் அதிருப்தியை கொடுத்ததால், பாரடைஸை விட்டுக்கொடுக்க இயலாது என்றிட, உடன் பிறந்தோரின் சண்டையால், பாரடைஸே இரண்டாகப் பிளவுபட்டது.


பாதி தேவதைகள் காஸ்மோவைப் பின்பற்றி சென்றிட, பாதி தேவதைகள் ஜோயலைப் பின்பற்றி வந்திருந்தனர். ஆனால் இவர்களது தந்தையான விக்டோரியா சாண்டா என்பவர் 'பாரடைஸ் கிரிஸ்டோ' என்ற அந்த மந்திரக்கோலின் பொறுப்பை ஜோயலிடமே ஒப்படைத்து சென்றிருக்க, அந்த கோபத்தினால் இன்றளவும் பாரடைஸ் இரண்டாக பிளவுபட்டே உள்ளது.


அவ்வப்போது காஸ்மோவைச் சேர்ந்தோருக்கும் ஜோயலைச் சேர்ந்தோருக்கும் மோதல்கள் நிகழ்ந்த போதும், அவரவர் கூட்டில் மகிழ்ச்சியாகவே இருந்தனர். ஒவ்வொரு ஆக்கத்தைச் சேர்ந்த தேவதைகளும் அதே ஆக்கத்தைச் சேர்ந்தோரையே காதலித்து சேர வேண்டும் என்பது பாரடைஸ் விதி. அப்படி வேறு ஆக்கத்தைசீ சேர்ந்தோர் மீது காதல் கொண்டால், இருவரில் யாரேனும் ஒருவர் இணம் மாறிக்கொண்டு இணையலாம் என்று பாரடைஸின் விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால் இணம் மாறியவர், அந்த இணத்தின் மந்திரங்களை கற்று தேருவதற்கு பலவருட காலங்கள் ஆகலாம் என்பதால் யாரும் இதுவரையில் அவ்வாறு மாறியதில்லை.


அங்கு அனைவரும் தோழிகள் மூவரின் வருகைக்காக காத்திருக்க, இங்கு முகத்தில் சுரீரென்று வெயில் அடிப்பதை இதமாய் ரசித்தபடி உறங்கிக் கொண்டிருந்த சைராவை கடுப்புடன் பார்த்திருந்தனர், தோழிகள் இருவரும்.


"அடியே.. இவ எழுந்திரிக்குற போல தெரியலை" என்று அடாமினா கூற, 


"என்ன பண்ணலாம்" என்று ஐலா வினவினாள். 


"உன் வேலையைக் காட்டு" என்று அடாமினா கூற, 


"ரைட்டு. என் புருஷன்கிட்ட என்னையக் கோர்த்து விடுறதுல உங்க ரெண்டு பேருக்கும் அப்படி என்னத்தான் ஆனந்தமோ. தேவையில்லாம வெளியிடத்துல மந்திரசக்திய யூஸ் பண்ணாதனு பக்கம் பக்கமா பேசுவான்டி" என்று ஐலா புலம்பினாள்.


"வெளியிடத்துல தானே யூஸ் பண்ணக்கூடாது. நம்ம வீட்டுக்குள்ள இருந்தே யூஸ் பண்ணலாம்" என்று அடாமினா கூற, 


"அதுசரி" என்று புலம்பியபடி ஜன்னலருகே சென்று "ப்ளோ (blow)"என்று கைகளை அசைத்துக் கூறினாள். 


அத்தனை நேரம் அவர்கள் சாளரம் வழியே வந்துகொண்டிருந்த கதிரவனின் ஒளியை, இவளது மந்திரத்தால் காற்றடித்து நகர்ந்த மேகம் மறைத்துவிட, சட்டென முழித்துக் கொண்டாள், சைரா.


தோழிகள் இருவரையும் முறைத்த சைரா, "ஏ.. ஏன்டி" என்க, 


"காலேஜ் போகனும் சைரா. நீ இப்படி வெயிலப் பார்த்தாளே மல்லாந்து படுத்துடுற" என்று ஐலா புலம்ப, "சரிசரி நிறுத்து வரேன்" என்றாள்.


மூவரும் தயாராகி வெளியே வர, அடாமினாவின் ஆர்காடியாவும், சைராவின், காலிடாவும் வந்து தத்தமது உரிமையாளரின் தோளில் அமர்ந்து கொண்டது. 


"அட.. எங்க நம்மால காணும்" என்ற ஐலா, "ப்ரிஸா (brisa)" என்று அழைக்க, ஓர் புதரிலிருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு ஓர் முயல் வந்தது. (வின்ட் ஃபேரீஸின் தலைமை பிராணியான யூனிகார்ன், வெளியிடங்களில் முயலாக மாறிவிடும்).


அதனை தூக்கிக் கொண்டு முத்தமிட்டு தடவிக் கொடுத்த ஐலா, "என்னோட படிப்பு முடியப் போகுது. இன்னும் கொஞ்ச நாட்கள்ல நான் பாரடைஸ் போயிடுவேன். நீங்க ரெண்டு பேரும் தான் லாஸ்ட். ஏற்கனவே நம்ம மூனு பேரையும் அங்க ரொம்ப மிஸ் பண்றதா ஆலிஸ் சொன்னான்" என்று கூற, 


"ஏ.. ஆலிஸ் வந்தானா ஐலா?" என்று இருவரும் உற்சாகமாகக் கேட்டனர்.


"இல்ல. ஓட்(தூது) வந்தது" என்று கூறியவள், மூச்சுக் காற்றை இழுத்து விட்டாள். 


புன்னகையாகத் தோழியைக் கண்ட இருவரையும், "அலாஸ்கா மிஸ் யூ போத் மோர்‌. நம்ம கேங்லயே இன்னும் சிங்கில்ஸ் நீங்க மூனு பேர் தான்" என்று ஐலா கேலி செய்ய, 


அடாமினாவின் மனதில் அவன் முகம் மின்னி மறைந்தது. 


அதில் பதறிப்போனவள், தன் மனதோடு "சாரி லார்ட் ஜோயல்" என்று கூறிக் கொண்டு "சரிசரி வாங்க கிளம்பலாம்" என்று கூறினாள். 


எப்போதும்போல் சென்று முதல் வகுப்பில் வருகைப்பதிவை மட்டும் போட்டுக் கொண்டு நூலகத்திற்கு விரைந்தவள், "ஆர்காட்.. சைரா வந்தா மட்டும் சிக்னல் கொடு சரியா?" என்க, 


அது தன் பிடறி முடிகளை சிலிர்த்துக் கொண்டு பறந்தது. 


ஆர்காட் பறந்த திசையைக் கண்டு சிரித்துக் கொண்டவள், "கோவக்காரியாகிட்ட ஆர்காடியா" என்று கூறியபடி மேலே சென்றாள்.


ஆர்வத்தோடு வந்தவளுக்கு ஏமாற்றம் கொடுக்காது அவனும் அங்கு இருக்க, அவன் பார்வை வட்டத்தில் தான் படாதவாறும், தன் பார்வை வட்டத்தை விட்டு அவன் செல்லாதவாறும் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து தன் வேலையைத் துவங்கினாள்.


அவளது பச்சை நிற விழிகள் அவனை காணும் நேரங்களில் சற்று கூடுதலாகவே பளபளப்பது போன்று ஒரு பிம்பத்தினை ஏற்படுத்தும். 


இங்கு புத்தகத்தில் மூழ்கியது போல் இருந்தாலும் அவள் பார்வையின் வட்டத்தில் இருப்பதை உணர்ந்து இதழ் பிரித்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தான், ஃபேர்லே (Farley).


பார்ப்பதற்கு புத்தகத்தைப் படித்துவிட்டு அவன் சிரிப்பது போல் இருந்தாலும், அவன் மகிழ்ச்சியின் காரணம் அவளது பார்வை தான். அந்த பார்வையின் வீச்சு அவனை அழகாய் சுருட்டிக் கொள்ள, இன்றாவது அவளிடம் பேசிவிடும் ஆர்வத்துடன் எழுந்தான். 


ஆனால் அதற்குள் சைரா வருவதாக ஆர்காட் அனுப்பிய தூது மலர் ஒன்று அடாமினா புத்தகத்தில் வந்து விழ, அதை எடுத்துக் கொண்டு விறுவிறுவென கீழேச் சென்றிட்டாள் அவன் ஃப்ளோரா.






Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02