3. அந்தமற்ற ஆதரமே
அத்தியாயம்-03
தன் தோள் பையின் வார் பகுதியை பதட்டத்துடன் தேய்த்தபடியே அந்த பூங்காவில் அமர்ந்திருந்த அடாமினா, 'அய்யோ.. சைராவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுடுவாளே. லார்ட் ஜேயல்.. ஏன் எனக்கு இப்படியொரு சோதனை' என்று மனதோடு புலம்ப, ஃபேர்லே அங்கு வந்து சேர்ந்தான்.
அவனைக் கண்டதும் சட்டென எழுந்து நின்றவள் பதட்டம் மேலும் ஏறிவிட, இதயம் பந்தையக்குதிரையின் வேகத்தில் துடித்தது.
"ஏ நான் என்ன ப்ரொபசரா எழுந்து நிக்குறதுக்கு? சிட்டவுன் டியர் (உட்காரு அன்பே)" என்றபடி ஆடவன் அந்த கல்லிருக்கையில் அமர,
சற்று இடைவெளி விட்டுத் தானும் அமர்ந்தாள்.
"ஐம் ஜான் ஃபேர்லே" என்று அவன் கூற,
"ஃப்ளோ.. ஃப்ளோரா அடாமினா" என்றாள்.
"நைஸ் அன்ட் டிபரென்ட் நேம்" என்று அவன் கூற, மெல்லிய முருவலைப் பரிசாகத் தந்தாள்.
"தினமும் லைப்ரேரி வருவியே, புக்ஸ் படிக்க அவ்வளவு பிடிக்குமா?" என்று அவன் வினவ,
உள்ளுக்குள் திடுக்கிட்டவள், தன் தொண்டையைச் செருமிக் கொண்டு "அ..ஆமா. உங்களுக்கும் பிடிக்குமா?" என்று வினவினாள்.
"ரொம்ப பிடிக்கும். அதுவும் ஃபேன்டஸி கதைகள் தான் ரொம்ப பிடிக்கும்" என்று அவன் கூற,
அவளுள் மெல்லிய நடுக்கம் பிறந்தது.
"ரொம்ப கிரியேடிவா யோசிச்சிருப்பாங்க. ரியல் லைஃப்ல மனுஷன் கற்பனை பண்ணுறதவிட எக்ஸைடடா யோசிச்சு எழுதியிருப்பாங்க" என்று அவன் கூற,
'உங்களைப் போல மனிதர்களுக்கு வேணும்னா அது கற்பனையா இருக்கலாம். எங்க உலகத்துல அது நிஜம்' என்று நினைத்துக் கொண்டாள்.
அவளது அமைதியைகா கலைக்க வேண்டி, "உனக்கு எந்த மாதிரி கதைகள் பிடிக்கும்?" என்று அவன் வினவ,
"எ..எ..எனக்கு லவ்..லவ் ஸ்டோரீஸ் பிடிக்கும்" என்றாள்.
நாளை அவனை சைட்டடிக்கப் போகும் தருணத்தில், அவள் தன் முன் விரித்து வைத்துக் கொள்ளப் போகும் என்சைக்லோபீடியா அவளைப் பார்த்து பல்லிலிக்கப் போவது உறுதி என்ற எண்ணத்தில் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள், அவனைப் பார்க்க, "லவ்? இன்டிரெஸ்டிங்" என்றான்.
அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாதவள், "எ.. எனக்கு ஒரு வர்க் இருக்கு. நான் கிளம்பட்டுமா?" என்று வினவ,
"ஷ்யோர்! இன்னொரு நாள் மீட் பண்ணலாம்" என்றான்.
'இன்னொரு நாளா?' என உள்ளுக்குள் திடுக்கிட்டவள், "ம்..ம்ம்" என்றுவிட்டு சென்றிட,
செல்லுமவளை இதழில் வசீகரப் புன்னகையுடன் பார்த்தவன், 'பாருடி பாருடி.. ஒரே ஒரு தடவைத் திரும்பிப் பார்த்துட்டுப் போ' என்று உள்ளுக்குள் முனகினான்.
பூங்காவை விட்டு அவள் வெளியேறியதும் சிறு ஏமாற்றத்துடன் அவன் முகம் சுருங்க, மெல்ல தலைநீட்டி எட்டிப் பார்த்தவள் அவன் அவளைப் பார்த்து உற்சாகமான முகபாவனைக்கு மாறியதும் விழிகள் விரித்து அவ்விடம் விட்டு விரைந்தாள்.
கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓட, அதை புறங்கையில் துடைத்துக் கொண்டவள், தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள்.
'ஃப்ளோரா.. நீ செய்யுறது திரோகம்னு உனக்குப் புரியலையா? ஏன்டி திரும்பி எட்டிப் பார்த்த? இப்ப நீ அவரை விரும்புறனு நினைச்சுட்டு மனசுல ஆசைய வளர்த்துக்க மாட்டாரா? உன்னால எப்படி ஒரு மனிதனை அடைய முடியும்? இவ்வளவு தெரிஞ்சும் ஒருத்தரோட மனசுல ஆசைய வளர்த்துவிட்டுட்டு ஏமாத்துறது திரோகமில்லையா?' என்று மனதோடு கரைந்தவள் தன் வீட்டை அடைய, அடக்கமாட்டாது கண்ணீர் பொங்கி வந்தது.
கதவுகளைப் பூட்டிக்கொண்டு அப்படியே அதில் சாய்ந்தவள் கண்ணீர் சிந்த, எங்கிருந்தோ பறந்து வந்து ஜன்னலின் வழி புகுந்துக் கொண்டது ஆர்காடியா.
முட்டுகளைக் கட்டிக்கொண்டு அதில் தன் முகத்தைப் புதைத்த வண்ணம் அமர்ந்தபடி அழுது கரைந்தவள் அருகே வந்த ஆர்காட் அவள் கைகளில் உரச, மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
அதிலிருந்து பச்சை நிறத்திலிருந்து மந்திரப்பொடிகள் பரவ, கண்களை கூசும்படியான பச்சை ஒளி வீடெங்கும் பரவியது. அதில் துளியும் கண்கள் கூசப்பெறாது பார்த்தவள், அப்படியே அமர்ந்திருக்க, தனது ரேகல் டிராகன் வடிவம் பெற்றது ஆர்காடியா.
"எதுக்கு அடாமினா இந்த அழுகை?" என்று தனது பாஷையில் ஆர்காட் வினவ,
அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டு "நா..நான் தப்பு பண்ணிட்டேன் ஆர்காட். என்னால ஒருத்தரோட மனசு ரொம்ப கொடூரமா பாதிக்கப்படப் போகுது" என்றவள் தான், உண்மையில் மனமுடைந்து இருந்தாள்.
அதிகபடியான சோகத்தில் தனது உடல், தேவதையின் உருவம் பெற்று இரக்கைகள் முளைப்பதைக் கூட உணராது உருமாறியவள், "அடாமினா.. உன்னோட உணர்வுகளைக் கட்டுப்படுத்து" என்று ஆர்காடியா மென்மையாகக் கூறவும், தான் உருமாறியதைக் கண்டாள்.
கண்களை மூடி தன்னை ஒருநிலைப்படுத்த முயற்சித்தவள் கண்முன் ஃபேர்லேவின் முகமே வந்து மறைந்தது.
"ச்ச" என்று விழி திறந்தவள், "முடியலை ஆர்காட்" என்று பாவமாகக் கூறினாள்.
"மனதை லார்ட் ஜோயலிடம் ஒப்படை அடாமி.. உன்னால முடியும்" என்று ஆர்காட் கூற, கண்களை மூடி 'லார்ட் ஜோயல். ப்ளீஸ் ஹெல்ப் மீ' என்று இரைஞ்சினாள்.
அது பயனளித்த வண்ணமாய் அவள் உருமாறிவிட, ஆர்காடியாவும் பறவையாக மாறியது.
ஆர்காட்டை வருடிக் கொடுத்து, "பயமா இருக்கு ஆர்காட். நான் செஞ்ச தப்பை தவிர்க்க முடியாம மேலும் மேலும் அந்தத் தப்பையே செய்யுறேன். எப்படா படிச்சு முடிச்சு பாராடைஸ் போகப்போறோமோனு இருக்கு" என்று கூறிய அடாமினா, அங்கு சென்ற பின் அவனை இழந்து தவிக்கப்போகும் தவிப்பை அறிந்திருந்தால், இப்படிக் கூறியிருக்க மாட்டாள் போலும்.
ஆர்காட் தன் முகத்தை அவள் முகத்தோடு இழைத்து உரச, பெருமூச்சுக்களை இழுத்து விட்டவள், தன்னை சமன் செய்து கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றாள்.
அங்கு தன்னவளுக்கு தன்மீது காதல் நிச்சயம் உள்ளது என்பதை உறுதிசெய்து கொண்ட சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தான், ஃபேர்லே.
அவள் தன்னை தினந்தோறும் நூலகத்தில் வைத்த கண் எடுக்காமல் பார்பதை உணரத் துவங்கியிருந்தவன், முதலில் அதை சாதாரணமாகத்தான் கடந்து வந்தான். ஒரு நாள் கேன்டீனில் நண்பர்களுடன் உணவு உண்டுக்கொண்டிருந்தவன் பின்னே, 'ஏ.. காதல் ஒரு வித்தியாசமான உணர்வுடி. அது பார்த்ததும் வராது. ஆனா பார்க்கப் பார்க்கத் தோன்றும். அது ஒரு போதை போல. போதையோட தாக்கம் அது கிடைக்காத போது தான் நம்மை பைத்தியமாக்கும். அதேபோல விரும்பியவரோட ஒரு ஓரவிழிப் பார்வை ஒருநாள் கிடைக்காம போனாலும் அந்த நாளே அத்தனை பிடித்தமின்மையா மாறிடும். அது ஒரு உணர்வு பூர்வமான விஷயம்.. சொல்லில் விளக்கம் தேட முடியாத ஆயிரம் கோடி மதிப்புற்ற கேள்வி' என்று அழகாய் ஏதோ ஓர் பெண் காதலுக்கு விளக்கம் கொடுப்பது கேட்டு பூரித்துப் போனான்.
அவள் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் திரும்பியவன், அடாமினாவைக் கண்டு அதிர்ந்து போனான்.
'ஏ.. சைட்டிங் கேர்ள். உனக்குள்ள இப்படியொரு ஆழமான கருத்துக்களா' என்று வியந்தவனுக்கு அன்றிலிருந்து அவள் வித்தியாசமாகத் தோன்றினாள் என்பதில் அதிசயமில்லையே!
மெல்ல மெல்ல ஒருவர் அறியாது மற்றொருவர் மனதில் காதலை அடைந்த இருவரில், இன்று அவள் மனம் அறிந்திடும் நோக்கத்துடன், நூலகம் விட்டு வெளியே வருகையில் அவள் மீது தற்செயலாக மோதுவது போல் மோதிக் கொண்டான்.
அவள் கையிலிருந்த புத்தகங்கள் கீழே விழுந்திட, “சாரி” என்றபடி அவளுக்கு உதவி செய்தவன், "ஏ யூ.. நீ தானே போன முறை காலேஜ்ல நடந்த ஆன் தி ஸ்பாட் ஸ்பீச்ல 'கிரியேடிவிடி' பத்திப் பேசினது?" என்று புதிதாக தெரியாதவளிடம் கேட்பது போல கேட்டான்.
அவன் கண்களில் மின்னிய ஆர்வமும் கோடி சூரியனின் பளபளப்பும் அவளுக்குள் ஒரு பயப்புகையை வீசியெறிய, தடுமாற்றமாய் "அ..ஆமா" என்றாள்.
"நைஸ் டு மீட் யூ. உன்னோட ஸ்பீச் ரொம்ப பிடிச்சிருந்தது. உன் ஃபேன் ஆகிட்டேன்" என்று பேச்சை வளர்த்தவன், "ஈவினிங் பக்கத்துல உள்ள பார்க்ல மீட் பண்ணுவோம்" என்க, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
"ஏன் ஷாக்? எதும் வர்க் இருக்கா?" என்று அவன் வினவ,
'ஆம்' என்று கூற கட்டளையிட்ட புத்தியை மீறி மனதின் தூண்டுதலோடு சம்மதித்தாள்.
அவளது சம்மதம் தந்த உவகையோடு கை குலுக்கிவிட்டு விடைபெற்றவன், பூங்கா சந்திப்பில் அவள் மனதையும் தெளிவுற அறிந்துவிட்டான். அது தந்த அளப்பரியா ஆனந்தத்தில் துள்ளிக் கொண்டிருந்தவன், விதி தங்கள் காதல் வாழ்வில் வைத்திருக்கும் சோதனைகளை அறிந்திருக்கவில்லை.
Comments
Post a Comment