4. அந்தமற்ற ஆதரமே
அத்தியாயம்-04
காலை நேரமதில், சைராவின் வீட்டில் அனைவரும் கூடியிருந்தனர். ஐலா, ஆலிஸ், அடாமினா, சைரா மற்றும் அலாஸ்கா ஆகியோர் அமர்ந்து கலகலத்துக் கொண்டிருக்க, அலாஸ்கா, "ஏ அடாமி.. நீ இல்லாம நல்லாவே இல்லை தெரியுமா அங்க?" என்று கூறினாள்.
அலாஸ்கா, சைரா மற்றும் அடாமினா தான் மிகவும் நெருக்கமானவர்கள். அதிலும் அலாஸ்காவுக்கு அடாமினா மீது ஒரு தனி பிரியம். அது பாகுபாடாக வெளிப்பட்டதில்லை என்றபோதும், அனைவருக்கும் அவளுக்கு அடாமினா மீது இருக்கும் அந்த பாசம் தெரிந்தே இருந்தது.
எப்போதும் பதிலுக்கு பதில் வாயளக்கும் அடாமினா தற்போது புன்னகையோடு நிறுத்திக் கொள்ள, அலாஸ்காவுக்கு அவளது அமைதியான அந்த பரிணாமம் மெல்ல மெல்ல உரைத்தது.
அனைவரது பேச்சு வார்த்தையும் முடிவு பெறவும், "ம்ம்.. என்ன ஐலா? ரொம்ப சந்தோஷமா கிளம்பிட்ட போல?" என்று அலாஸ்கா வினவ,
"இருக்காதா பின்ன? ஆலிஸ்கூட ரொமான்ஸ் பண்ண வேண்டியவள, இப்படிப் படிக்கப்போனு லார்ட் ஜோயல் அனுப்பி வைச்சுட்டார். பாவம் அங்க ஆலிஸும் தவியா தவிச்சுட்டார், இங்க ஐலாவும் தவியா தவிச்சுட்டா" என்று சைரா கூறினாள்.
பாரடைஸ் வாசிகள் பூமிக்கு சென்று சக மனிதரைப் போல் வாழ்ந்து அங்குள்ள அறிவியல் பற்றித் தெரிந்து கொண்டு வரவேண்டும் என்பது பாரடைஸின் நியதி.
லார்டாக இருப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் அமைத்து மனிதர்கள் வாழும் பகுதிக்கு அனுப்பி வைப்பார். அதன்படியே இவர்கள் இங்கு வந்திருந்தனர்.
தற்போது ஐலாவின் மனித வாழ்வு முடிவு பெறவே அவளை அழைத்துச் செல்ல ஆலிஸ் மற்றும் அலாஸ்கா வந்துள்ளனர்.
சைரா கூறியதில் சிறு வெட்கம் பெற்று சிரித்த ஐலா, ஆலிஸை பார்க்க அவனும் காதலாக அவளை பார்த்து புன்னகைத்தான்.
கூடியிருந்த கூட்டம் இவர்கள் காதல் சம்பாஷனைகள் கண்டு "ஓஹோ" என்று கத்த, மீண்டும் கலகலப்பு குடிபுகுந்தது.
ஐலா, ஆலிஸ் மற்றும் அலாஸ்கா புறப்பட ஆயத்தமாக, அடாமியை மட்டும் இழுத்துக்கொண்டு அலாஸ்கா தனியே சென்றாள்.
அதில் யாவரும் புன்னகைத்துக் கொள்ள,
"ஏ அடாமி.. என்னாச்சு உனக்கு? ஏன் ஒருமாதிரி இருக்க?" என்று அலாஸ்கா வினவினாள். அவளிடம் மறைக்கவும் மனமில்லை, தற்போது கூறவும் மனமில்லை அடாமினாவுக்கு.
"இல்லைனு பொய் சொல்ல மாட்டேன் அலாஸ். நான் இக்கட்டான ஒரு மனசங்கடத்தை இழுத்து விட்டுகிட்டு தவிக்குறேன். ஆனா இப்ப அதை உன்கிட்ட பகிர எனக்கு மனமே இல்லை. நான் பாரடைஸ் வந்த பிறகு கண்டிப்பா உன்கிட்ட பகிர்ந்துக்குறேன்" என்று அடாமி கூற,
அவளை அணைத்துக் கொண்ட அலாஸ்கா "ஒன்னுமில்லை அடாமி. நானிருக்கேன். உன் மனசை கஷ்டப்படுத்தும்படி எதுவும் நடக்காது" என்று ஆறுதல் கூறினாள்.
அவர்கள் பேச்சு அத்தோடு முடிந்துக் கொள்ள, மூவரும் புறப்பட்டு பாரடைஸ் சென்றனர். இங்கு அடாமி மற்றும் சைரா இருக்க,
"என்னாச்சு அடாமி? பாரடைஸ் ஞாபகம் வந்துடுச்சா?" என்று கேட்டது தான் தாமதம், அவளை அணைத்துக் கொண்டு அழுதுவிட்டாள்.
அனைவரையும் விட்டு பிரிந்திருந்த வலியும் இருந்தது தான். ஏற்கனவே இருக்கும் உறுத்தலோடு அதுவும் சேர்ந்து மனதை தைத்ததில் கலங்கி விட்டவள், தோழியிடம் சரணடைந்தாள்.
அவள் தலையை பரிவாய் வருடிய சைரா, "நான் தான் இருக்கேன்ல அடாமி. கவலையே படாத. நம்ம ரெண்டு பேரும் ஒன்னா தான் இங்கிருந்து கிளம்புவோம்" என்று கூற,
ஒரு பெருமூச்சுடன் என்று தலையசைத்தாள்.
அன்றைய நாள் அமைதியோடு கடந்திட, அடுத்த நாள் பல அதிரடிகளை அவளுக்காக வைத்துக் கொண்டு காத்திருந்தது. எப்போதும் அவனை பார்க்கும் ஆர்வத்துடன் கிளம்பி செல்பவளுக்கு அவன் தன்னுடன் ஆர்வமாக பேச ஆரம்பித்ததும், பயம் தொற்றிக் கொண்டிட்டது.
பதட்டத்துடன் மிதிவண்டியில் அமர்ந்தவள் தோளில் ஆர்காடியா வந்து அமர, "ஆர்காட்.. ஐம் ஸ்கேர்ட் ஆஃப் ஹிம் (அவனால் எனக்கு பயமாக உள்ளது)" என்று கூறினாள்.
அவள் முகத்தோடு தன் முகத்தை இழைத்த பறவை அவளுக்கு ஆறுதல் கூற, ஒரு பெருமூச்சுடன் மிதிவண்டியை மிதித்து இயக்கிச் சென்றாள்.
எப்போதும் போல நூலகம் செல்லத் துடித்தவளது கால்களைக் கடினப்பட்டுத் திருப்பியவள், வகுப்பறை நோக்கி செல்ல, வேகமாக பறந்து வந்த காலிடா அவள் முன் நின்றது.
அதைக் கண்டு திரும்பிப் பார்த்தவள், அவளை நோக்கி சைரா வருவதைக் கண்டு, "என்ன சைரா?" என்று வினவ,
"என்ன வழக்கமா லைப்ரேரி பக்கம் வீசும் காத்து இன்னிக்கு கிளாஸ் பக்கம் போகுது?" என்று சைரா வினவினாள்.
"அடியே.. அங்க போனாலும் திட்டுற போகலைனாலும் இப்படி சொல்ற. நான் இப்ப என்ன தான் பண்ணனும்?" என்று அடாமி கேட்க,
"சரி சரி காண்டாகாம வா" என்றாள்.
வகுப்பறை நோக்கி நடந்து கொண்டிருக்கையில், "ஐலா கிட்ட இருந்து ஓட் (தூது) வந்தது அடாமி" என்று சைரா கூற,
"ஓடா? நேத்து தானே கிளம்பினா? அதுக்குள்ள மிஸ் பண்றாளா என்ன?" என்று கேலியாக சிரித்தபடி அடாமி கேட்டாள்.
"இல்ல அடாமினா.. இது சீரியஸான விஷயம். அங்க லார்ட் ஜோயலுக்கும் லார்ட் காஸ்மோவுக்கும் இப்பலாம் அடிக்கடி முட்டிக்குதாம். நம்ம ஃபேரீஸ்கும் அவங்க ஃபேரீஸுக்கும் கைகலப்பு அதிகமாகிட்டே வருதாம். சீக்கிரமே போர் மூண்டுடுமோனு பயமா இருக்குனு சொல்றா" என்று சைரா கூற,
"என்ன சொல்ற சைரா? வாரா(war)? இத்தனை வருஷம் இல்லாம இப்பதான் வருதாக்கும்?" என்று அடாமினா கேட்டாள்.
"நானும் இதே தான் நினைச்சேன். ஆனா அடுத்து அவளோட ஓட்ல, இத்தனை வருஷம் இல்லாம இப்ப என்ன போர்னு தானே தோன்றுது? ஆனா இங்க உள்ள நிலவரத்தைப் பார்த்தா அப்படி தான் தெரியுதுனு சொல்றா. எனக்கு பயமா இருக்கு. நம்ம பாரடைஸோட அமைதி குழையாம இருக்கத்தான் லார்ட் ஜோயல் அவ்வளவு பிரயத்தனம் செய்றார். ஆனா.. அவரையும் மீறி நடக்கும் செயலுக்கு என்ன செய்ய முடியும் சொல்லு?" என்று சைரா கூற,
"ஏ என்ன சைரா இது? இதையெல்லாம் கேட்கும்போது நம்ம பாரடைஸுக்கு ரொம்ப அந்நியமா மாறின போல இருக்கு. போர்.. நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு" என்றவள் எண்ணப்போக்கோடு சென்று பொத்தென ஒருவன் மீது மோதிக் கொண்டாள்.
அந்த ஒருவன் ஃபேர்லேவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? அவனது ஸ்பரிசத்தினை உணர்ந்ததே இல்லாதவள் தான் அடாமினா. ஆனாலும் இடித்த வினாடியே அது ஃபேர்லேவாகத்தான் இருக்கும் என்று அவள் மனம் கூறிய கூற்றை உண்மையாக்கும் விதம் அவள் முன்னே நின்றவன், "ஏ ஃப்ளோரா.. சாரி" என்றான்.
அவன் தன்னை உரிமையாக அழைப்பதில் பதறிப்போனவள் சைராவைப் பார்க்க, சைரா இருவரையும் குழப்பமாக பார்த்தாள்.
சைராவைப் பார்த்தவன், "உன் பிரண்ட் தானே?" என்று வினவ,
"ம்..ம்ம்.. சைரா. சைரா இவர் ஃபேர்லே" என்று பெயருக்கு பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தாள்.
'அவளே விலகி வந்தும் ஏன் இவரை அவ முன்ன இந்த விதி அனுப்பி வைக்குதோ' என்று மனதோடு புலம்பிய சைரா, "ஹாய் ஃபேர்லே" என்க,
"ஹாய் சைரா" என்றான்.
'அய்யோ இந்த ஹேன்சம் வேற இவ முன்ன வந்து கூப்பிட்டுட்டான். இப்ப வீட்டுக்குப் போய் இவ பத்தி பத்தியா பேசியே என் பவர ஓச்சுடுவா. ஏற்கனவே பாரடைஸ் நிலைமைல பதறி இருக்கா. இப்ப பார்த்து வந்து என்னைக் கோர்த்து விடுறான்' என்று அடாமி நினைக்கையிலேயே அசராமல் அடுத்த குண்டை வீசினான்.
"ஃப்ளோரா.. நாளைக்கு வேற ஒரு காலேஜ்ல ஸ்பீச் காம்படீஷன் ஒன்னு இருக்கு. அதுல உன்னோட பெயரையும் என்னோட பெயரையும் கொடுத்து பதிவு பண்ணிட்டேன். நம்ம போகலாம். இதை சொல்ல தான் உன்னை தேடி வந்தேன்" என்று ஃபேர்லே கூற,
"ஏது? எ..எதுக்கு என்னோட நேம கொடுத்தீங்க? நா.. நான் எங்கேயும் வர விருப்பம் படலை" என்று படபடத்தாள்.
"ஏன்? நீ தான் நல்லா பேசுறியே. நீ வர்ற, நம்ம போறோம்" என்றவன் சென்றிட, இங்க அவளை முறைத்த சைரா, "எப்போயிருந்து இவ்வளவு கிளோஸானீங்க?" என்று வினவினாள்.
"ஏ சைரா.. நீ நினைக்குற போலலாம் இல்லை. எதேர்ச்சியா லைப்ரேரில இருந்து வரும் போது என்னைப் பார்த்தார். நான் அந்த ஆன் தி ஸ்பாட் ஸ்பீச்ல பேசினேன்ல? அதுல என் பேச்சு நல்லா இருந்துச்சு சொன்னாங்க. வேற எதுவும் இல்லை. இப்ப கூட அது வச்சு தான் பெயர் கொடுத்திருக்கார். கவலைப்படாத நான் வரலைனு சொல்லிடுவேன்" என்று அடாமினா கூற,
சற்றே யோசித்த சைரா, "இல்லை அடாமினா. நீ போயிட்டுவா. உனக்கு அந்த டேலன்ட் இருக்கு. அதனால தான் பெயரும் கொடுத்திருக்காங்க. இதுக்காக உன்னோட டேலன்டை மறைக்க வேண்டாம். ஆனா பார்த்து. உனக்கு நான் விளக்கம் கொடுக்கனும்னு அவசியம் இல்லை" என்றுவிட்டு சைரா சென்றாள்.
சென்றவளைக் கண்டு ஒரு பெருமூச்சு விட்டவள், 'லார்ட்.. எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனையா கொடுக்குறீங்க? அவர் கூட நாளைக்கு நாள் முழுக்க எப்படி ஸ்பென்ட் பண்ண?' என்று புலம்பிக் கொண்டு நகர்ந்தாள்.
அவளது புலம்பல் அவளைத் தவிர யாரையும் பாதிக்காத வண்ணம் அவளையே சுற்றி மிதக்க, அடுத்த நாள் அந்த உயர் ரக வண்டியில் கேசம் அலைபாய பறந்து கொண்டிருந்தாள், அவனுடன்.
உள்ளுக்குள் படபடப்பாகவும், மனதில் புதைந்த காதல் கொடுத்த குளுகுளுப்பும் கலந்து கொடுத்த உணர்வை உணர இயலாத தவிப்புடன் அவன் பின்னே அவள் அமர்ந்திருக்க, முன்னே வண்டியை இயக்கிக் கொண்டிருந்தவனுக்கு அத்தனை ஆனந்தமாக இருந்தது.
அவளுடனான இந்த முதல் பயணம், அதுவும் இருசக்கர வாகனப் பயணம் அவனுள் பல வண்ணங்களை அள்ளி வீச, அவள் தான் தனது செயலை எண்ணி மறுகிய வண்ணம் இருந்தாள்.
தூரத்தே அவர்கள் பின்னே ஆர்காடியா பறந்து வந்துகொண்டிருக்க, அதை கண்ணாடியில் கண்டவன், "உன் பெட் உன்னை கொஞ்ச நேரம் கூட பிரியாது போலயே" என்று வினவி அவளை நிலைக்கு கொண்டு வந்திருந்தான்.
"அ..ஆமா. ஆர்காட் என்னை விட்டு இருக்காது" என்று அவள் கூற,
"நானும் ஒரு பெட் வளர்க்குறேன். சேம் நீ வச்சுருக்குற இனப் பறவை தான்" என்று அவன் கூறினான்.
"ம்ம்.. நான் இருக்குற தெருவிலும் ஒருத்தர் ஆர்காட் போலவே ஒரு பறவை வச்சிருக்கார்" என்று கூறியவள், "உங்க பறவை பெயர் என்ன?" என்று வினவ,
"ஆடம் (Adam). என்னோட பிரண்டு வீட்ல இருக்கு" என்று கூறினான்.
"ஓ.." என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டவளை கண்ணாடி வழியே பார்த்தவன், "நெர்வஸா இருக்கியா?" என்று வினவ,
"இ.. இல்லையே" என்றாள்.
"உன் பேச்சுலயே தடுமாற்றம் இருக்கு. என்னாச்சு ஃப்ளோரா? போட்டிய நினைச்சு பதட்டமா?" என்று அவனே அவள் சமாளிப்பதற்கு வழிவகை செய்ய, "ஆமா" என்றாள்.
அந்த கல்லூரியை அடைந்தவன் வண்டியை நிறுத்த, வேகமாக கீழே இறங்கியவள், ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
"ஜஸ்ட் சில் ஃப்ளோரா" என்று அவன் கூற, "ம்ம்.." என்ற தலையசைப்போடு சென்றாள்.
போட்டி துவங்கி நல்லபடியாக நடந்தது. தங்களது பங்களிப்பைக் கொடுத்த இருவருக்கும் அதுவே திருப்தியைத் தந்திருக்க, வெற்றி பெறாத செய்தி இருவரையும் பெரிதாக பாதிக்கவில்லை.
அந்த நாள் முழுதும் அவளுடன் இருந்ததே அவனுக்கு அத்தனை சந்தோஷத்தைக் கொடுத்திருக்க, 'இதைவிட வேறென்ன வேண்டும்' என்ற உவகையோடு வீடு திரும்பினான்.
அவளை அவள் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தியவன், "எப்பவும்போல உன் பேச்சுல கவுந்துட்டேன்" என்று கூற, தயக்கத்துடன் அவனை ஏறிட்டு, "தேங்ஸ்" என்றவள், "நீங்களும் நல்லா பேசினீங்க" என்றாள்.
சன்னமான சிரிப்புடன் அவன் தலையசைக்க, விடைபெற்று திரும்பியவளது துப்பட்டாவை பிடித்து இழுப்பதை போன்ற உணர்வில் திடுக்கிட்டு திரும்பினாள். அது அவன் வண்டியில் மாட்டியிருக்கவும், ஒரு பெருமூச்சுடன் அவள் அதை எடுத்துவிட குனிய, அதே நேரம் தானும் குனிந்தவன் அவளோடு முட்டிக் கொண்டான்.
"உப்ஸ்.. சாரி" என்று சிரித்தபடி கூறியவன் அதை எடுத்துவிட்டு, "பாய் (bye) ஹாவ் அ ப்ளஸன்ட் ஸ்லீப்" என்க, "குட் நைட்" என்றுவிட்டு உள்ளே சென்றாள்.
Comments
Post a Comment