5.அந்தமற்ற ஆதரமே

 அத்தியாயம்-05



"ஹெலோ சார்.. உங்க ஆடமை வந்து வாங்கிட்டு போகமாட்டீங்களா? நீங்க இல்லாம என்னைப் படுத்தி எடுத்துடுச்சு" என்று டைஸா கூற, 


"ஏ.. சாரி. மறந்துட்டேன்" என்று ஃபேர்லே கூறினான். 


"அதானே.. பார்த்தியா ஆடம்? உன்னையே மறக்குமளவு பய லவ்ல விழுந்துட்டான் போல" என்று அவனது தோழி டைஸா கூற, 


சிறு வெட்கத்துடன் தன் கைநீட்டி பறவையை அழைத்துத் தலைகோதியவன், "ஷி இஸ் மை ஏஞ்சல்" என்றான்.


"ம்ம்.. அதான் உன் முகமே சொல்லுதே. இந்த பிரண்ட மறந்துடாதடா. நீங்க ஹேப்பியா இருக்கனும்னு ஃபர்ஸ்ட் விஷ் நான் தான்" என்று கூறிய டைஸா அறியவில்லை நடக்கவிருப்பதை!


அங்கு கட்டிலில் விழுந்த அடாமினா அவனுடனான தருணங்களை மனதோடு அசைபோட்டபடியே உறங்கிப்போக, மறுநாள் காலை வெகு தாமதமாகவே எழுந்தாள். 


"என்ன மேடம் இப்பதான் தூக்கம் கலையுதோ?" என்று கேட்ட சைராவைப் பார்த்து அடித்துப் பிடித்து எழுந்தவள் மணியைப் பார்க்க அது காலை எட்டு என்று காட்டியது.


"ஏ எட்டா?" என்று பதறியவள் பரபரப்புடன் கிளம்பி தயாராகி வர, "நேத்து காம்படீஷன் என்ன அச்சு அடாமி" என்று சைரா வினவினாள். 


தனது மிதிவண்டியை எடுத்து ஏறி அமர்ந்த அடாமி, "ஜெயிக்கலை சைரா.. ஆனா போட்டி நல்லா இருந்தது" என்று கூற, 


"ம்ம்.. அவங்க?" என்று சைரா வினவினாள். 


'ஃபேர்லேவைப் பற்றிய பேச்சு வந்தாலே என்னிடம் தடுமாற்றம் தான்' என்று தன்னைத் தானே மனதோடு திட்டிக் கொண்டவள், "அ..அவங்களும் ஜெயிக்கலை சைரா. ஆனா நல்லா பேசினாங்க" என்று கூடுதல் தகவலோடு கூற, 


"ஓகேடா" என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.


இருவருமாக அந்த பல்கலைக்கழகத்தினை அடைய, "ஓகே சைரா.. ஈவ்னிங் பார்ப்போம்" என்றவள் தன் தோளில் இருக்கும் ஆர்காட்டைத் தடவிக் கொடுத்தபடி தனது வகுப்பறை நோக்கிச் சென்றாள். 


என்றும் போல் இன்றும் மனதோடு அவனைக் காணவே கூடாது என்ற வேண்டுதலோடு தான் வந்தாள். ஆனால் என்றும்போல் இன்றும் அவள் வேண்டுதல் தண்ணீர்க் கோலமாய் மறைந்து போனது..


அவள் முன் அட்டகாசமான புன்னகையுடன் அவன் வந்து நிற்க, இடித்திடும் படி சென்று அவனை உள்ளூரு உணர்ந்தவளாக நின்று கொண்டாள். மெல்ல தலைநிமிர்த்தி, தன் கண்களோடு கண்கள் கலக்க துடித்திடும் அவன் விழிகளைப் பார்த்ததும் சுற்றத்தை மறக்கடிக்கும் ஓர் சலனம் அவளுள்!


அதிலிருந்து அவளை மீட்ட பெருமையை ஏற்றுக்கொண்ட ஆர்காட், தன் அலகால் அவள் தலையில் கொட்டிட, ஆர்காட்டைத் திரும்பிப் பார்த்து செயற்கை புன்னகை ஒன்றை கொடுத்தவள், "ஹ..ஹாய் ஃபேர்லே" என்றாள். 


"ஹாய் ஃப்ளோரா. நேத்து நம்ம பேசினோமே என்னோட பெட் ஆடம். உன்கிட்ட காட்ட கூட்டிட்டு வந்தேன்" என்று கூறிய ஃபேர்லே தன் கையை தூக்கி சைகை செய்ய, வேகமாக பறந்து வந்த பறவை அவன் கை மீது அமர்ந்து கொண்டது.


அதில் லேசான புன்னகை உதிர்த்தவள் வகுப்பு நேரம் வந்ததாக அடித்த மணியொலியில் "ஒ..ஓகே ஃபேர்லே கிளாஸ் போகனும்" என்றபடி வேகமாக சென்றாள். 


செல்லுபவளையே புன்னகையாகப் பார்த்தவன், "ஏ ஆடம்.. ஐம் இன் லவ் வித் ஹர் (நான் அவள் மீது காதல் வயப்பட்டுவிட்டேன்)" என்று கூற, 


அவன் தலைமேல அமர்ந்திருந்த விதியானது அவளது பின்புலனும் அவனது பின்புலனும் எண்ணி கோரமாக சிரித்துவிட்டுச் சென்றது.


அங்கு பாரடைஸில் போருக்கான அடித்தளம் வெகுவாக வலுத்துக் கொண்டிருந்தது. காஸ்மோவை நேரடியாகச் சந்தித்துப் பேச லார்ட் ஜோயல் முடிவாகி இருக்க, தன் தம்பிக்கு தன் மந்திரசக்தி மூலமாக தூது அனுப்பிவிட்டுக் காத்திருந்தார்.


அவரது சந்திப்பை தான் ஒப்புக் கொண்டதாகவும், உரைந்திருக்கும் ஓர் நீர்வீழ்ச்சிக்கு வரும்படியும் காஸ்மோ பதில் தூது அனுப்பியிருக்க, உடனடியாக ஜோயல் புறப்பட்டிருந்தார். 


அண்ணனைக் கண்டதும் மரியாதை செழுத்தும் நிமித்தம் தலை வணங்கிய காஸ்மோ, "கூப்பிடக் காரணம்?" என்று நேரடியாக விடயத்திற்கு வர, 


"என் மீது மரியாதை வைத்து தலைவணங்கும் நீ என்கூட போர் புரிய மட்டும் எப்படி முடிவா இருக்க?" என்ற கேள்வியால் திணறடித்தார் ஜோயல்.


"போர் செய்ய நான் ஒன்னும் முடிவு பண்ணலை.. என்னை அந்த முடிவுக்கு நீங்க தான் கட்டாயப்படுத்துறீங்க" என்று காஸ்மோ, ஜோயல் முகம் நோக்காது கூற, 


"நானா?" என்று ஜோயல் குழம்பினார்.


"பாரடைஸ் கிரிஸ்டோ இருக்குமிடத்தையும் அதன் பொருப்பையும் என்கிட்ட கொடுத்துட்டா நான் ஏன் போர் புரியப் போறேன்?" என்று எங்கோ பார்த்த வண்ணம் காஸ்மோ பேச, 


"அதை பாதுகாக்கும் பொருப்பு உன்கிட்ட இல்லை காஸ்மோ" என்று ஜோயல் பொறுமையாகக் கூறினார்.


அதில் வெகுண்டெழுந்த காஸ்மோ, "அதை நீங்க எப்படி சொல்றீங்க? உங்களுக்கு மட்டும் ரொம்ப பொருப்பிருக்கோ?" என்று வினவ, 


"நிச்சயம் உனக்கில்லை. நீ சின்ன வயதுலயே தீய மந்திர சக்திகள கத்துக்க காட்டிய ஆர்வமே அதை சொல்லும்" என்று ஜோயல் கூறினார்.


"ஆனா அது தவறுனு தெரிந்ததும் நான் கைவிட்டுட்டேன்" என்று காஸ்மோ கூற, 


"பாரடைஸ் வேணும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே தான் உன் ஆர்வத்தை அடக்கிட்டு இருக்கனு எனக்குத் தெரியும். மேலும் பாரடைஸ ஆளுபவனுக்கு பொறுமை ரொம்ப அவசியம். உன்கிட்ட அது இல்லை. அதுவும் பாரடைஸ் நம்ம சொர்க்கம். அதுல போரை ஏற்படுத்த நீ முயற்சிப்பது பெரும் தவறு. நம்ம விக்டோரியா வம்சத்தையே நீ அவமதிக்குற. உன்னை நம்பி உன் பின்னாடி இருக்கும் மக்களுக்காகவாவது யோசி காஸ்மோ. இப்பவே பாதி பாரடைஸ நீ பிரிச்சு வச்சு ஆண்டுகிட்டு இருக்கும் பாவத்தை சுமக்குற. மேலும் உன்னை நம்பி இருப்பவர்களுக்கு துரோகம் செய்யும்படி போரைத் துவங்காத" என்று ஜோயல் கூறிவிட்டுச் சென்றார்.


"நீங்க எவ்வளவு பேசினாலும் என் முடிவில் மாற்றம் வராது. இந்த பாரடைஸ் எனக்குத்தான் சொந்தம். இதை யாருக்காகவும் நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன். பாரடைஸ் கிரிஸ்டோ என் கைக்கு வந்தா நான் மிக சக்தி வாய்ந்த ஃபேரியா மாறிடுவேன். அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். என் மக்களை எப்படி பார்த்துக்கனும்னு எனக்குத் தெரியும். இதுவரை அவர்களுக்கு ஒரு நல்ல தலைவனா தான் நான் இருந்தேன்.. இருக்கேன்.." என்று காஸ்மோ கத்த, 


அவரை அமைதியாகத் திரும்பிப் பார்த்த ஜோயல், "ஒத்துக்குறேன்.. உன் கீழ உள்ளவங்களுக்கு நல்ல தலைவனா இருந்த, இருக்க.. ஆனா உன்னை ஆட்டிப்படைக்கும் சுயநலம் காரணமா கிரிஸ்டோ கிடைத்தா நீ ஒரு நல்ல தலைவனா இருக்க மாட்ட. நான் சொல்வதைக் கேளு. இந்த ஆசையை விட்டுடு. நீ உன் சுயநலத்தை விட்டு விக்டோரிய வம்சத்து ஃபேரியா உன் திறமையை வளர்த்துக்கும் வழியைப் பாரு.. உனக்கு சேர வேண்டியது உன்னைத் தேடி அதுவா தான் வரனும். நீயா போகக் கூடாது" என்றார்.


அவர் எத்தனை பொறுமையாக எடுத்துக் கூறியும், காஸ்மோ தான் புரிந்துகொள்வதாக இல்லை. ஜோயலுக்குத் தெரியும் தனது தம்பி தீயவன் இல்லை‌ தான்.. ஆனால் அவனது பேராசைக்குணம் அவனைத் தீய பாதையில் இழுத்துச் சென்றிடும் என்று. அதனால் தான் பாரடைஸை அவனிடம் ஒப்படைக்கும் எண்ணம் துளியும் இல்லை.


"நான் கண்டிப்பா போர் தொடுப்பேன்" என்று காஸ்மோ கர்ஜனையாக கத்த, 


"இது நல்லதுக்கில்லை காஸ்மோ. பாரடைஸ் அழிவை சந்திச்சிடும்" என்று ஜோயல் கூறினார். 


"அப்ப பாரடைஸ் கிரிஸ்டோ இருக்குமிடத்த சொல்லுங்க. அதையும் பாரடைஸயும் என் தலைமையில் ஒப்படைங்க" என்று காஸ்மோ இகழ்ச்சி புன்னகையுடன் கூற, அவனையே அமைதியாகப் பார்த்திருந்தார்.


சிலநிமிட மௌனம் காஸ்மோவின் கண்களில் பளபளப்பைக் கூட்டியது. 


அவனை நேருக்கு நேர் பார்த்த ஜோயல், "அது முடியாது காஸ்மோ. விக்டோரிய வம்சத்துல இறந்து போகும் தலைவர் யார் கையில் பொறுப்பை ஒப்படைக்குறாரோ அவருக்குத்தான் சாகும் வரை பொறுப்பு. என்னை சாகடிச்சுட்டு பொறுப்பை கையில் எடுக்க நீ நினைத்தாலும் நடக்காது. எனக்கடுத்த பொறுப்பை என் மகனுக்குத் தான் நான் கொடுப்பேன்" என்று கூற, காஸ்மோவின் பொறுமை மேலும் சோதனைக்குள்ளானது.


"உங்க மேல பெரிய மதிப்பு வைத்திருந்தேன். அதை நீங்களே அழிச்சுக்குறீங்க.. பாரடைஸில் போர் மூண்டே ஆகனும் என்பது தான் உங்க எண்ணமா இருந்தா அதை எப்படி மாற்றுறது? கண்டிப்பா போர் நடக்கும்.. தயாரா இருந்துக்கோங்க" என்று காஸ்மோ கூற, 


"நிச்சயம் உன் கையில் பாரடைஸ கொடுத்து மொத்தமா வீழ்ச்சிக்கு வழிவகை செய்வதற்கு போர் செய்து சின்ன சேதங்களோட காப்பாற்றுவது எவ்வளவோ மேல்" என்றுவிட்டுச் சென்றார்.


சென்றவரை கோபம் கொப்பளிக்கப் பார்த்த காஸ்மோ "ஆ.." என்று கத்தி, தன் சக்தி கொண்டு அருகில் இருந்த பனியில் உறைந்த நீர்வீழ்ச்சியை உடைத்துவிட்டுச் சென்றார்.


அங்கு தன் இடம் திரும்பிய ஜோயல் யோசனையோடு நடந்துவர, "லார்ட் ஜோயல்" என்று ஃபோர்ட் தலைவணங்கினான். 


சிறு தலையசைப்போடு "பயிற்சி முடிஞ்சதா ஃபோர்ட்?" என்று ஜோயல் வினவ, "முடிஞ்சது லார்ட்" என்றான்.


"ஹ்ம்.. கார்டிலியா எங்க?" என்று அவர் வினவ, 


சிறு வெட்கப் புன்னகையுடன் "வாங்க லார்ட்" என்றபடி அவரை அழைத்துச் சென்றான். 


"பேபி ஃபேர்ரி எப்ப வெளிய வருவீங்க? நீங்க எந்த ஃபேரியா இருப்பீங்க? பாய் ஆர் கேர்ள் (ஆணா பெண்ணா?)" என்றபடி அந்த மாயாஜாலத்தினால் மிதந்துக் கொண்டிருந்த கண்ணாடி போன்ற பையிற்குள் மிதக்கும் குட்டி தேவதையைப் பார்த்து கார்டிலியா பேசிக் கொண்டிருக்க, 


"அடடே! ஃபேரி பேக் (fairy bag)" என்று ஜோயல் பூரிப்போடு கூறினார்.


ஃபேரி பேக் என்பது இரண்டு மனம் ஒத்து இணைந்த தேவதைகள் தங்கள் காதலால் உருவாக்கும் ஒன்று. காதல் புரிந்து இணையும் இரு தேவதைகளும் வலிகளைத் தாங்கி தங்கள் சக்தியைக் கொடுத்து காதலால் உருவாக்கும் இந்த ஃபேரி பேக் தான் அவர்களது வாரிசினை உருவாக்கிக் கொடுக்கும். முற்றும் முழுதும் அவர்கள் காதலின் சாட்சியாய்!


அதில் சிறு வெட்கச்சிரிப்பைக் கொடுத்த கார்டிலியா, "ஆமா லார்ட்.. நாங்களே சொல்ல தான் காலைல வந்தோம். நீங்க வெளிய போயிருக்குறதா சொன்னாங்க" என்று கூற, சன்னமான புன்னகையுடன் அந்த ஃபேரி பேக்கை வருடினார்.


உயிர் ஜனிக்க இருக்கும் பொழுதில் அழிவின் ஆக்கம் துவங்க உள்ளதே என்ற வேதனை அவர் மனதை வண்டாய் குடைய, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர், "நல்லதாகவே நடக்கட்டும்" என்றார்.

Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02