6.அந்தமற்ற ஆதரமே
அத்தியாயம்-06
அந்தி மாலை வேளை… சோகமே உருவாக அந்த பூங்காவில் அமர்ந்திருந்த அடாமினா, ஃபேர்லேவின் வரவிற்காகக் காத்திருந்தாள்.
'இவ்வளவு சடுதியில் எப்படி இந்த பூமியால் சுற்ற முடிந்தது? என் சக்தியைக் கொண்டு இதன் இயக்கத்தினை நிறுத்திவிட்டால் தான் என்ன?' என்று எண்ணியபடியே அமர்ந்திருந்தாள்.
கையில் பூங்கொத்துடன் வந்த ஃபேர்லேவைக் கண்டவள் விழிகள் விரிய எழுந்து நிற்க, புன்னகையுடன் கண் சிமிட்டி அவளருகே வந்தான்.
"ஃபே..ஃபேர்லே" என்று அவள் தடுமாற, "ஃப்ளோரா" என்றபடி அவளிடம் அந்த பூங்கொத்தினைக் கொடுத்தான்.
அதையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள், "எ..என்னது ஃபேர்லே" என்று வினவ,
"படிச்சு முடிச்சாச்சுல? வாழ்த்துக்கள்" என்றபடி அதை நீட்டினான்.
அவளையும் அறியாமல் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டபடி அவள் அதை வாங்க, ஒரு குறும்பு சிரிப்போடு அதைப் பார்த்தான்.
அவள் முகத்தில் மீண்டும் ஒரு சோகம்.. அதே நேரம் அவன் காதலைக் கூறிடுவானோ என்ற பதட்டம் அவளுக்கு.
"அப்றம் ப்ளோரா.. நெக்ஸ்ட் பிளான் என்ன?" என்று அவன் வினவ,
"எ.. என் சொந்த ஊருக்குப் போறேன்" என்றாள்.
"ஓ.." என்றவன் "எங்க?" என்று வினவ, லேசான தடுமாற்றத்திற்கு பின்,
"கெனடா" என்றாள்.
"ஓ" என்று அகல விரிந்த விழிகளோட, "அப்றம் எப்ப மீட் பண்ணமுடியும் நம்ம?" என்றவன் கேள்வியில் மனதால் உடைந்து போனவள்,
"பண்ண முடியும்னு தோனலை ஃபேர்லே" என்றாள்.
"கேனடால எங்கன்னு சொல்லு. நான் வருவேன்" என்றவன் கூற்றில் அவள் இதழ்கள் இகழ்ச்சியாய் நெழிய, "இல்ல ஃபேர்லே. அது வேணாம்" என்றாள்.
"ஏன்?" என்ற ஒரே வார்த்தையில் ஃபேர்லே அவளை பரிதவிக்கச் செய்ய, அழுதிவிடும் போல் அவளுக்கு படபடப்பாக இருந்தது.
"நீ எங்க போனாலும் நான் வருவேன் ஃப்ளோரா" என்று ஆழ்ந்த குரலில் அவன் கூற, விழுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"நான்.." என கூற வந்தவன் வாயைத் தன் கை கொண்டு மூடியவள், 'உன் காதலை காது குளிர கேட்டுட்டு அதை மறுக்கும் பாவத்தை எனக்குக் கொடுத்துடாத ஃபேர்லே' என்று மனதோடு கூறிக் கொண்டாள்.
அவளது கலங்கிய விழிகளைப் பார்த்த ஃபேர்லே, அவள் கை விலக்கி "ஃப்ளோரா" என்று அவள் முகம் தாங்க, "ஸ்.. சாரி அன்ட் தேங்ஸ்" என்றவள் விறுவிறுவென நகர்ந்து ஓடாத குறையாக அங்கிருந்து வந்தாள்.
தன் வீட்டை அடைந்தவுடன் தாங்க இயலாத வேதனையோடு அவள் கதறி அழ, அவளது மாய சக்தி பச்சை நிற கங்குகளாய் வெளி சிதறியது!
மெல்ல மனித உருவிலிருந்து தன் தேவதை உருவிற்க மாறியவள், "அடாமினா" என்ற ஆர்காட்டின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
அதுவும் ரேகல் டிராகன் உருவத்திற்கு மாறியிருக்க, "அ..ஆர்காட்" என்றபடி அதை அணைத்துக் கொண்டாள்.
"நம்ம பாரடைஸுக்கு புறப்பட வேண்டிய நேரம் வந்துடுச்சு அடாமினா" என்று ஆர்காட் கூற,
"த.. தெரியும்" என்றவள், "என்னால ஃபேர்லேவ மறக்கவே முடியாதா ஆர்கார்? ப..பயமா இருக்கு. அவரை விட்டுப் போறதை நினைச்சாலே மனசெல்லாம் வலிக்குது" என்று கண்ணீரோடு கரைத்தாள்.
ஆர்காட் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க, "பயமா இருக்கு ஆர்காட்" என்று கேவினாள். தன் வாலால் அவளை வருடிய ஆர்காட், "அடாமினா. நீ ரொம்ப யோசிக்காத. லார்ட் ஜோயல் எல்லாத்தையும் பார்த்துப்பாரு. நம்ம கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு. சைரா வந்துடுவா" என்று ஆர்காடியா கூறவும், தன் கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டாள்.
"நீ கவலைபடாத அடாமி. எல்லாம் ஒரு காரணமா தான் நடக்கும். லார்ட் ஜோயல நம்பு" என்று ஆர்காட் கூற, அதை அணைத்து அதன் முகத்தோடு தன் முகம் இழைத்து நின்றாள். மெல்ல மெல்ல அவள் மனம் சமன்பட, சைராவும் காலிடாவும் அவ்விடம் வந்து சேர்ந்தனர்.
"அட ரெண்டு பேரும் உருமாறிட்டீங்களா?" என்ற சைராவும் தன் உருவத்திற்கு மாறிட,
காலிடாவைப் பார்த்த அடாமி, "காலிடா.. நீயும் டிராகனா மாறிட்டா இந்த வீடு தாங்காது. பாரடைஸ் போன பிறகு நீங்க ரெண்டு பேரும் உருமாருங்க. ஆர்காட் பறவையா மாறு" என்று கூறியதும் ஆர்காட் மீண்டும் பறவையாக மாறியது.
ஒருவரை ஒருவர் பார்த்த சைரா மற்றும் அடாமி சிறு தலையசைப்போடு வலது கையினை நீட்ட, பறவைகள் இரண்டும் கைமேல் வந்து அமர்ந்தனர்.
"மூவ் டூ பாரடைஸ்" என்று இருவரும் சத்தமிட்டு கூற, அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியின் டாலர் பிரகாசமாக மினுமினுத்தது.
அதன் ஒளி நால்வரையும் விழுங்கிக் கொள்ள, நொடி பொழுதில் இருவரும் பாரடைஸை அடைந்தனர்.
இருவரும் லார்ட் ஜோயல் முன் வந்து நிற்க, ஒளி மங்கி விழி மலர்ந்து பார்த்தனர். லார்ட் ஜோயல் இருவரையும் கண்கள் மலர ஏறிட, இருவரும் மண்டியிட்டு வலது கையினை இடது மார்பில் குத்தி தங்கள் வணக்கத்தினை தெரிவித்தனர்.
"வெல்கம் பாரடைஸ்" என்று சந்தோஷமாய் அவர் கூற,
எழுந்து நின்ற இருவரும் ஓடி சென்று அவர் முன் நின்றனர்.
இருவரையும் பரிவோடு பார்த்து தலைகோதி, "உங்களை அனுப்பிட்டு நான் தான் ரொம்ப வருந்தினேன். உங்க வருகைக்கு தான் இங்க நிறையபேர் காத்திருந்தாங்க" என்றவர் முகம் லேசாக வாடிப்போனது.
"என்னாச்சு லார்ட்?" என்று இருவரும் அவர் முகம் மாற்றம் கண்டு வினவ,
"ஆனா இந்த மாதிரி நேரம் நீங்க வரும்படி ஆயிடுச்சு" என்றார்.
சைராவும் அடாமியும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொள்ள,
"காஸ்மோ போருக்கு தயாரா இருக்கும்படி தூது அனுப்பிருக்கான். போர் எப்போனு கூடிய விரைவில் தூது அனுப்புறதா சொல்லிருக்கான்" என்று வருத்தத்தோடு கூறினார்.
அவர்களுக்கு அச்செய்தி ஆச்சரியமாக இருக்க,
"லார்ட்.. நீங்க போய் பேசி பார்க்கலையா?" என்று சைரா வினவியதும், "பேசிப்பார்க்காம இருப்பேனா சைரா?" என்றார்.
"போர் தான் மூண்டாகனும்னு இருந்தா நம்மால அதை மாத்த முடியாது லார்ட். அவர் கைக்கு பாரடைஸ் போயி மொத்தமா அழிவதற்கு போரே மேல்" என்று கூறிய அடாமினா தானே இந்த போரை நிறுத்தக் கோரி வேண்டப்போவதை அப்போது அறிந்திருக்கவில்லை!
அவள் தலையை பரிவோடு கோதியவர் "சரி போங்க.. உங்களுக்காக அங்க நிறையா பேர் காத்திருக்காங்க" என்று கூற,
புன்னகையுடன் இருவரும் திரும்பினர்.
சட்டென ஏதோ நினைவு வந்தவராக, "அடாமினா" என்று ஜோயல் அழைத்திட,
இருவரும் திரும்பி அவரை நோக்கினர்.
அடாமியை மட்டும் வரும்படி சைகை செய்தவர், சைரா சென்றதும், "என்கிட்ட எதுவும் சொல்லனுமா?" என்று வினவ,
அவள் கண்கள் குளம் கட்டியது.
"நா.. நான் சொல்ல என்ன இருக்கு லார்ட்? அதான் உங்களுக்கே தெரியுமே" என்று அடாமி கூற,
அவள் தலைகோதியவர், "இது பெரிய பிரலயத்திற்கு வழிவகை செய்யும்" என்றார்.
"தெரியும்.. ஆனா மனசு வலிக்குது லார்ட்" என்று அவள் கூற,
"ஆனா நீ நினைக்கும்படியான பிரலயம் இல்லை" என்றார்.
"இல்ல லார்ட்.. என்னால உங்களுக்கு எந்த அவப்பெயரும் வரவேண்டாம். இதை இதோட விடுவோம். நடக்குறது நடக்கட்டும்" என்று கூறியவள் தன் கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டு புன்னகைக்க, அவள் தலைகோதி அனுப்பி வைத்தார்.
அவரது அருகே வந்த வெள்ளை மற்றும் பழுப்பு நிற க்ரிஃபின் பறவை (கழுகு முகமும் சிங்கத்தின் உடலும் கொண்ட உயிரினம்) "லார்ட்.. ஏன் நீங்க ஏதும் சொல்லலை?" என்று வினவ,
அதன் தலையைக் கோதிய ஜோயல், "அவளுக்கு பொய்யான நம்பிக்கையைக் கொடுக்க நான் விரும்பலை ஸ்மித்" என்றார்.
அங்கு வெளியே வந்தவளை வேகமாக ஓடி வந்த அலாஸ்கா அணைத்துக் கொள்ள,
சற்றே தடுமாறியவள் சிரிப்போடு, "ஹே அலாஸ்" என்றாள்.
"உன்ன ரொம்ம்ப மிஸ் பண்ணேன்" என்று அலாஸ்கா கூற,
"ஆஹா.. நானும் தான்" என்றபடி அவளை இன்னும் இறுக்கிக் கொண்டாள்.
கார்டிலியாவையும் ஃபோர்டையும் பார்த்த அடாமி, "பேபி ஃபேரி வந்துட்டதா கேள்விப்பட்டேன்?" என்று புன்னகையுடன் வினவ,
சிறு வெட்கப் புன்னகையுடன் இருவரும் ‘ஆம்’ என்று தலையசைத்தனர்.
வேகமாக தனது சிறகை அடித்து படபடத்த அலாஸ், "அய்யோ அடாமி, சைரா. உங்க கிட்ட சொல்ல நிறையா இருக்கு. ஃபேபி பேக் தான் நம்ம கார்டிலியா ஃபோர்ட் கிட்ட இருக்கு. ஆனா நம்ம தோரா ரெய்டனுக்கு பேபி ஃபேரியே வந்தாச்சு. கியூட் லிட்டில் பாய் ஃபேரி" என்று உற்சாகமாக கூற,
"ஏ.. சூப்பர்" என்று அடாமி மற்றும் சைரா குதூகலித்தனர்.
நேரே சென்று தோரா மற்றும் ரெய்டனின் வாரிசான தண்டர் என்ற குழந்தை தேவதையைக் கண்டனர்.
அந்த பிஞ்சு தேவதையின் மெல்லிய விரல்களும் சிறகுகளும் தொட்டு ஸ்பரிசித்த தோழிகளில், "அவ்.. ரொம்ப கியூட்.. இப்படியொரு அழகுக்காகவே சீக்கிரம் ஒரு இளிச்சவாயன பிடிக்கனும்" என்று சைரா கூறினாள்.
அதில் யாவரும் சிரிக்க, அடாமியின் மனப்பெட்டகத்தில் ஃபேர்லேவின் முகம் வந்து போனது.
சிலநொடிகளிலேயே தன்னை சமன் செய்தவள், பேபி ஃபேரியினை வாங்கி வைத்துக் கொண்டு புன்னகைத்தாள்.
அங்கு தனது அறையில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்த ஃபேர்லேவிடம் வந்து அமர்ந்த அவனது தோழி டைஸா "என்ன மேன்.. ரொம்ப அமைதியா இருக்க? உன் லவ்வர் ஞாபகம் போல?" என்று வினவினாள்.
"அவள நான் எங்க மறந்தேன் நினைவு படுத்திப் பார்க்க?" என்று அவன் கூற,
சிரித்துக் கொண்டவள், "அவகிட்ட உன் லவ்வ கூட சொல்லாமவாடா வந்த?" என்று கேட்டாள்.
"ஹ்ம்.. சொல்லனும்னு தான் போனேன்.. ஆனா அவ அதை கேட்கும் மனநிலையில் இல்லாதபோல இருந்தா. நாளைக்கு மீட் பண்ணனும்னு இருக்கேன்" என்று அவள் அவனை விட்டுச் சென்றதே அறியாது அவன் கூற,
"ரொம்ப லேட் பண்ணாத மேன்.." என்று டைஸா கூறினாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், "ஷி இஸ் மை ஏஞ்சல்.. அவ என்னைவிட்டு எங்கேயும் போக மாட்டா" என்று அதீத நம்பிக்கையோடு கூறிக் கொண்டான்.
அங்கு கார்டிலியா மற்றும் ஃபோர்டின் ஃபேரி பேக்கினை கண்டு வந்தவர்கள் தங்களது வலமையான பயிற்சி செய்யும் பூங்காவில் கூடினர்.
பேச்சு கலகலப்போடு துவங்கி அமைதியில் நிலைபெற, "அப்போ கண்டிப்பா போர் இருக்கா?" என்று சைரா வினவினாள்.
மற்றவர்களிடம் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு உருவாக,
"இந்த போர் ஏதோ என் மனசுக்கு பெரிய பயத்தைக் கொடுக்குது" என்று ஐலா கூறினாள்.
"போர்னாலே அமைதிய குழைப்பது தானே ஐலா. கண்டிப்பா இது ஒரு பெரும் அழிவை சந்திக்கும்" என்று ரெய்டன் கூற,
"சரியா சொன்ன ரெய்டன். நிச்சயம் இது பெரும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனா காஸ்மோ தலைமை ஏற்றபின்பு உருவாகும் வீழ்ச்சியோடு யோசித்தால் குறைவு தான்" என்று ஆலிஸ் கூறினான்.
"எல்லாம் சரிதான்.. அ..ஆனா ஏதோ" என்று நெஞ்சில் அடைத்த உணர்வை நீவிவிட்டுக் கொண்டவள், "எனக்கு சொல்லத் தெரியலை" என்க,
அவள் தோளில்
கைபோட்ட தோரா, "எதுவும் யோசிக்காத ஐலா. நம்ம லார்ட் என்ன சொல்றாரோ அதுபடி செய்வது தான் நம்ம கடமை" என்றாள். எல்லாம் உணர்ந்தும் ஐலாவின் மனதில் ஏதோ அபாய ஓசையே எதிரொலிக்க, அங்கு திடுமென ஓடி வந்தது ஓர் வெள்ளை சிங்கம்.
"எய்ரா!" என்று அலாஸ்கா தனது பிராணியைப் பார்த்து எழ,
"காஸ்மோ போர் தேதி அறிவிச்சட்டார். உடனடியா எல்லாரையும் வரும்படி லார்ட் அழைக்குறாரு" என்று கூறியது.
Comments
Post a Comment