Posts

Showing posts from October, 2025

விசை-09

Image
  விசை-09 “அத்தான்.. அவசரமா வேலை வந்துடுச்சு எனக்கு ஒரு ஒதவி செய்றீங்களா?” என்று முகில், அய்யனார் அழைப்பை ஏற்றதும் கூறியிருக்க, “சொல்லுடா. என்னாச்சு?” என்றான். “அத்தான்.. அங்க மில்லுல ஏதோ வர்கர்ஸ் குள்ள சண்டை” என்று அவன் முடிக்கும் முன், “நா வரவா?” என்று அய்யனார் கேட்க, “இல்ல இல்ல அத்தான். அத நானே பாத்துப்பேன். பள்ளிக்கூடத்துக்குப் போய் புள்ளைகல கூட்டிவரனும்” என்றான். “அவ்ளோ தானா? எப்படா போகனும்?” என்று அய்யனார் கேட்க, “நாலு மணிக்கு விட்ருவாக. இப்ப நீங்க கிளம்பினா சரியாருக்கும். நம்ம தர்ஷனயும் பாப்பாவையும் கூட்டி வரனும். இராவும் வேலையா போயிருக்கா. புள்ளைய கூட்டிட்டு வர சொல்லிருந்தா” என்று முகில் கூறினான். “பாப்பா யாருடா?” என்று அய்யனார் புரியாது கேட்க, “ஸ்ஸ்..” என்று தலையில் தட்டிக் கொண்டவன், “என் பிரெண்டு சொல்வேன்ல அத்தான்? இறைவி. அவளோட பொண்ணு சக்தி” என்று கூறினான். “சரிடா. எப்படியிருப்பா? தர்ஷ் கிட்ட கேட்டா சொல்லுவான்ல?” என்று அவன் கேட்க, “ரெண்டும் ஒன்னாத்தான் வருமுங்க அத்தான்” என்றான். “சரி நீ பாத்து போ. எதாதுனா கூப்பிடு” என்று அய்யனார் அவனுக்கு ஆயிரம் பத்திரம் கூற, புன்னகையாய்,...

விசை-08

Image
  விசை - 08 தனது அறையில் அமர்ந்திருந்த இறைவி, தான் தீட்டிய ஓவியமாய் தன் கரம் குடிகொண்ட தன்னவனை ரசித்துப் பார்த்தாள். காவலதிகாரியாய் கம்பீரமாய் நின்றிருந்தவனின் கண்களில் அவள் எப்போதும் காணும் தீட்சண்யம் இன்றி, அவளது கரி எழுதுகோலால் ஆன ஓவியத்திலுள்ள கண்களில் ஒரு கனிவு குடியிருந்தது. முந்தைய நாள் அவன் தன்னை இரண்டாம் முறையாக ரட்சித்தத் தருணம், மனதைக் கணக்கச் செய்த அதே கணம், இதம் காணவும் செய்தது. இருவேறு முரணான உணர்வுகளும், அவன் ஒருவனால்... அதனை அவள் ஆசை தீர ரசிக்கும் நேரம், “இரா…” என்று முகில் அழைக்கும் சப்தம் கேட்டது. நொடியில் அவளுக்கு மூச்சே முட்டுமளவு பதட்டம் சூழ்ந்தது. “அ... ஆங் மு... முகி…” என்றபடி பதறி எழுந்தவள், அவசர அவசரமாய் அலமாரியைத் திறக்க, அவனோ கதவினைத் திறந்திருந்தான். அவள் 'ஆங் முகி' என்றதில் கதவினைத் திறக்க அனுமதி கோரியதாய் நினைத்து அவன் கதவைத் திறந்திருக்க, அவசரமாய் காகிதத்தை உள்ளே வைத்தவள் சடாரென மூடியதில் அவள் கரத்தில் நச்சென்று அடித்திருந்தது. “ஸ்ஸ் ஆ…” என்று அவள் கையை உதற, கோடாய் அவள் விரலிலிருந்து ரத்தம் வடிந்தது. “ஏ இரா…” என்றபடி பதறி அவன் வர, அவன் குரலில் உள்...

விசை-07

Image
  விசை - 07 மதியம் உணவை முடித்த இறைவி, தனது அறையிலிருந்து தலைமுடியைச் சீராய் பின்னலிட்டு வெளியே வர, “ஏத்தா என்னத்தா இது உடுப்பு?” என்று வீராயி கேட்டார். தான் போட்டிருக்கும் சாதாரண பருத்தி சுடிதாரைப் பார்த்துக் கொண்டவள், “இதுக்கு என்ன அப்பத்தா?” என்று கேட்க, “அந்தப் புள்ள மருதாணி வைக்கமட்டுமில்லாது, உன்னைய வீடு தேடி வந்து பத்திரிகையோடு அழைச்சுதுல? ஏதோ மருதாணி வைக்கிறதுக்குன்னே புதுசா விசேஷமாப் பண்ணுதாங்கன்னுதானே சொன்னா? அது பேரு என்னது?” என்று யோசித்தார். மெல்ல சிரித்த இறைவி, “சங்கீத் அப்பத்தா” என்க, “என்ன கீத்தோ... விசேஷ வீட்டுக்குப் போடுறாப்புலயா போட்டுருக்க நீ?” என்று கேட்டார். அவள் “ப்ச்... நான் என்ன விசேஷத்துக்கா அப்பத்தா போறேன்?” என்க, “அந்தப் புள்ள அப்படித் தானே உன்னைய அழைச்சுது நேத்து வந்து?” என்றாள். இறைவி தன் அப்பத்தாவை ஆயாசமாய்ப் பார்க்க, “சீல கட்டிக்கத் தானே ஆத்தா?” என்று கேட்டார். “அப்பத்தா” என்று இறைவி பல்லைக் கடிக்க, “ஏந்த்தா தாயி?” என்று பாவம் போல் கேட்டார். “நீங்க என்னத்துக்கு சேலை கட்டிக்கச் சொல்லுறீங்கன்னு புரியாம இல்ல அப்பத்தா” என்று அவள் கூற, வீராயி முகம் வாடியத...

விசை-06

Image
  விசை - 06 இரண்டு நாட்கள் ஓடியிருந்தது. அந்த வீட்டின் கலையே இழந்து போனதுபோல் உணர்ந்த வீராயிக்கும், இறைவிக்கும், சக்தி அவர்கள் வீட்டிலும் வாழ்விலும் எத்தனை ஆழமாய்க் கலந்திருக்கிறாள் என்பதைக் காட்சிப்படுத்தும் சான்றாய் அந்த இரண்டு நாட்கள் இருந்தது. தன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டு, சுவாசத்தை அவள் அகத்தோடு கூறிக் கொண்டு படுத்திருக்கும் குழந்தையின் கன்னத்தை மிக மென்மையாய் வருடிக் கொடுத்தபடியே சாய்ந்து அமர்ந்திருந்தாள் இறைவி. இரண்டு நாட்களாய் மருதாணி போடும் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு, வீட்டிலிருந்தபடியே புகைப்படங்கள் வரையும் பணியை மட்டும் செய்துகொண்டிருந்தாள். வீராயி தான் பார்த்துக்கொள்வதாய்க் கூறியும் கூட அவளுக்கு மனது ஒப்பவில்லை. தான் இருந்து தன் மகளைப் பார்த்துக் கொள்வதைப்போல் ஆகுமா? என்ற உணர்வே தலைதூக்கியது. அவள் எண்ணம் போல், சக்தியும் தொட்டதற்கெல்லாம் அன்னையைத்தான் தேடினாள். உணவு உண்ண, தண்ணீர் குடிக்க, மாத்திரை போட்டுக்கொள்ள என்று அனைத்திற்கும் இறைவி வேண்டுமாகப்பட்டாள் அவளுக்கு. “எம்புள்ள ரெண்டு நாள்லயே இப்புடி சோர்ந்துபோச்சே அப்பத்தா” என்று வருத்தமாய் அவள் கூற, “புள்ளையவிட ஒன்...

விசை-05

Image
 விசை-05 வீட்டில் தனது அலுவலக அறையில் அமர்ந்து, புருவங்களைத் தேய்த்துக் கொண்டிருந்த அய்யனார், அடுத்து கையிலெடுத்த வழக்கை எப்படித் தீர்ப்பதென்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான். சமீபமாய் போதைப் பொருள் விற்பனைகள் அப்பகுதியில் நடந்து வருகின்றன. அமைதியாக, திரைமறைவிற்குள் நடந்துகொண்டிருந்த இச்செயல், பள்ளி மாணவன் போதைப்பொருளின் ஆதிக்கத்தில் தன் ஆசிரியரை அடித்துக் காயப்படுத்திய செய்தியில் அம்பலமானது. அப்போதுதான் மாணவர்களிடையேவும் போதைப்பொருள் விற்பனை நடந்துகொண்டுள்ளது என்று அறியப்பெற்ற அய்யனார், இந்த விற்பனைக்கான ஆணிவேரைக் கண்டறிந்து கலையும் யோசனையில் ஆழ்ந்தான். இவ்வாறான யோசனையில் அவன் இருக்க, அவனது அலைபேசி ஒலி எழுப்பியது. அதை எடுத்துப் பார்த்தவன், “ஸ்ஸ்.. மறந்தேபோனேனே” என்று நெற்றியில் அறைந்துகொண்டு அழைப்பை ஏற்க, எதிர்புறம் பெரும் அமைதி. “சாரிடா” என்று அய்யனார் கூற, “பேசாதீங்க அத்தான்” என்றது சாட்சாத் நம் முகிலனே. முகிலின் தந்தையின் பெரியம்மாவின் மகளே அய்யனாரின் அன்னை காமாட்சி. காதைச் சுற்றி மூக்கைத் தொடும் அளவு தூரத்துச் சொந்தம்தான் என்றாலும், சிறு வயதில் அனைவரும் ஒரே ஊரில் அருகருகே வசித்துவந்...

விசை-04

Image
  விசை-04 கிணற்றுக்குள் தவறி விழுந்தவளை மேலிருந்து பலர் அழைப்பதைப் போன்ற உணர்வில் சிரமப்பட்டுத் தன் விழிகளைத் திறந்தாள், இறைவி. தலையில் பாறையைக் கட்டிவைத்தார்போன்று பெரும் பாரமாய் இருக்க, தன் கரத்தால் நெற்றியை அழுத்திக்கொண்டு எழ முயற்சித்தாள். அவள் தோளைச் சுற்றிக் கரமிட்டுத் தாங்கியவண்ணம் எழுந்து அமரவைத்த முகில், “இறைவி கேட்குதா?” என்று இத்தோடு நான்காம் முறையாக உறக்க அழைத்திட்டான். “ம்ம்” என்று ஈனசுவரத்தில் அவள் சப்தம் எழுப்ப, அருகே கவலையுடன் நின்றிருந்த வீராயியையும், அவரைக் கட்டிக்கொண்டு பயத்துடன் நின்றிருந்த சக்தீஸ்வரியையும் பார்த்து, “ஒன்னுமில்லடா அம்மாக்கு” என்றான். வீராயியிடமிருந்து முகிலிடம் வந்த சக்தி, “ரொம்ப நேரமா அம்மாவ எழுப்பினேன் முகி மாமா. அம்மா எழவேயில்ல. என்கூடதான் கூடத்துல படுத்துந்தாங்க. எப்ப ரூம் வந்தாங்க கேளுங்க” என்று மிகுந்த வருத்தத்துடன் குறைபடிக்க, முந்தைய நாள் கனவு கண்டு விழித்தது, அறைக்கு வந்தது, தனது வரைபடங்களைப் பார்வையிட்டது, அவற்றை மீண்டும் மறைத்துவைத்திட்டுக் கட்டிலில் அமர்ந்து எதற்கெதற்கோ அழுதது, அப்படியே உறங்கிப்போனதென்று இறைவிக்கு வரிசையாக அனைத்தும் ...