திருப்பம்-50

திருப்பம்-50 நேரம் அதன் இசைவில் நகர, மாலை வேளை திரிபுரா வந்து சேர்ந்தாள். அவள் வந்தாளே தெய்வாவிற்கும் சங்கமித்ராவிற்கும் இடையே கலவரம் மூண்டுவிடுவது வலமை என்பதால், சங்கமித்ரா ஒருவித படபடப்புடனே இருந்தாள். நாளும் பொழுதும் கடக்கும் சிறுசிறு சண்டைகளும் கூட, திரிபுரா இருந்தால் பூதாகரமாய் அமையும். அதனாலேயே வாக்குவதாங்களைத் தவிர்த்திடும் முனைப்போடு அமைதியாக இருந்தாள் பெண். திரிபுராவைப் பார்த்ததும் அவிநாஷின் குறுஞ்செய்தி நினைவு வந்தோனாய், “அக்கா நாளைக்கு ரெடியாயி இங்கன வந்துடு. எல்லாம் ஒன்னா போயிடலாம்” என்று வளவன் கூறினான். “நான் வரலலே. நீங்க போயி வாங்க” என்று திரிபுரா கூற, “அன்..மைணி ஏன் மைணி? நீங்களும் வாங்க” என்று சங்கமித்ரா கூறினாள். அவள் வரவில்லை என்றதும், பரபரப்பாய் அழைத்தவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தான் எதாவது பேசி அவர் எதாவது தவறாக புரிந்துகொள்வாரோ? என்ற அச்சத்தில் என்ன பேசுவதன்று தெரியாது விழித்தாள். இதில் அண்ணிக்கும் மைணிக்கும் இடையான தடுமாற்றம் வேறு வந்து தொலைத்தது. “இல்லத்தா.. நீங்க போய் வாங்க” என்று திரிபுரா கூற, “அக்கா நீயா ஏதும் நெனச்சுக்காதக்கா. அண்ணே எனக்க...