திருப்பம்-94

திருப்பம்-94 'அன்புள்ள திருமாலுக்கு, இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மிஸ்டர் திருமால் மித்ரா. யோசித்துப் பார்க்கும்போது ஒருமாதிரி புல்லரிக்குது. ஒரு வருஷம் ஆயிடுச்சு நாம கல்யாணம் பண்ணி! இந்த ஒரு வருஷத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள், உணர்வுகள், ஆசைகள், ஏக்கங்கள், சண்டைகள், எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் விதமான காதல் மழைகள்! ஒருமாதிரி நல்லாருக்கு. காதல் கசக்குதைய்யானு இருந்த என்னைக் காதலிச்சு, காதலிக்க வச்சு, காதல்மேல ஒரு தூய்மையான அபிப்ராயத்தை உருவாக்கி, என் காதலுக்கான இலக்கணமாவே ஆயிட்டீங்க. நம்மளோட இந்த அழகான காதலும், அதுக்கு உரிமம் கொடுத்த உறவும் நிலைச்சு நிற்கனும்னு மனசார வேண்டிக்குறேன். மீண்டும் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்ங்க. உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்குது. இன்னும் இன்னும் பிடிக்கனும்’ என்று எழுதி இதய வடிவங்கள் பல வரைந்து, அழகான இதய வடிவ உறைக்குள் அதை வைத்தாள். பால்கனிக்குச் சென்று, அவன் பராமரித்துப் பாதுகாத்திருந்த சங்குப்பூச் செடியிலிருந்து பூக்கள் இரண்டு பறித்தவள், அதனை உறைக்குள் வைத்துவிட்டு அதனை மேஜையின் இழுப்பறையினுள் பதுக்கி வைத்தாள். இழுப்பறைக்குள் முந்தைய நாள் அவள் ...