1.அந்தமற்ற ஆதரமே

அத்தியாயம்-01 சுற்றிலும் யுத்தம் நடந்ததற்கான அடையாளமாய், குறுதிகறை படிந்து, ஆங்காங்கே பூமி பிளந்து, மழை பொழிய மனமற்றபோதும் வானம் கருத்து காட்சியளித்தது. எங்கும் சோக ஓலங்களின் ஒலிகள் மட்டுமே பிரதிபலிக்க, அனைத்தையும் கண்களில் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர், அவ்விருவர். வழிமாறிப் போன தன் செயலில் இப்பேற்பட்ட பலி நடந்துவிட்டதை சற்றும் ஜீரணிக்க இயலவில்லை அந்த ஒருவரால்! தான் இத்தனை பெரிய பேரழிவுக்கு காரணியாகுமளவு வசியப்படுத்தப்பட்டதை சற்றும் ஏற்க மனமின்றி கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தார். அவர் தோளில் கைபோட்ட மற்றயவர், "நீ அழறது ஒரு அண்ணனா பார்க்கக் கஷ்டமா இருந்தாலும் உனக்கு ஆறுதல் சொல்லத் துளியும் எனக்கு மனசில்லை. சொல்ல வருத்தமா இருந்தாலும் இந்த பேரழிவுக்கு நீ ஒருத்தன் தான் காரணம்" என்று ஜோயல் கூற, கண்ணீரோட மண்டியிட்டு அமர்ந்து அவர் கால்களைப் பற்றிக்கொண்டு கதறினார் காஸ்மோ. அந்த மொத்த கூட்டமும் கதறியழும் காஸ்மோவை கண்களில் கணல் வெறியோட பார்க்க, அவரால் மன்னிப்பைக் கூட கேட்க இயலவில்லை. தன்னால் நடந்த இழப்பினை மன்னிப்பால் ஈடுகட்ட இயலாது என்று தெரிந்தும் அதை கேட்...