திருப்பம்-16

திருப்பம்-16 “மாமா” என்று அவிநாஷ் அவர் தோள் தொட, மருமகன் கரத்ததை அழுந்தத் தட்டிக் கொடுத்தபடி நிமிர்ந்து அமர்ந்தார். கண்கள் சிவக்க அமைதியும் அழுத்தமுமாய் நின்றிருந்த வளவன் விழிகள், அவள் அறைவிட்டு வெளியே வந்துவிட மாட்டாளா? என்பதிலேயே படிந்திருந்தது. அவன் உள்ளம் அவள் அகம் சென்றடைந்ததோ என்னவோ? தற்செயலாகக் கதவைத் திறந்துக் கொண்டு வந்த பாவையவள், கூடத்தில் நிற்பவனை அதிர்வாகக் கண்டாள். சச்சிதானந்தம் மற்றும் அவிநாஷ் அவளுக்கு புறம் காட்டி நிற்க, அவளவனும் சுயம்புலிங்கமும் அவள் முகம் பார்க்கும்படி இருந்தனர். வெளிப்படையான அதிர்ச்சியோடு நெஞ்சை நீவிக் கொண்டவள் விழிகள் நொடியில் தழும்பியது. சட்டெனத் திரும்பிக் கொண்டாள். ஏறி இறங்கும் நெஞ்சாங்கூட்டை அழுத்தி சமன் செய்தவள், தன் கண்ணீரை அழுத்தமாய் துடைத்துவிட்டுத் திரும்ப, அவளைப் பார்த்த சுயம்புலிங்கம், “மக்ளே வாமா” என்றார். அவள் பெற்றோரும் அத்தானும் அவளைத் திரும்பிப் பார்க்க, சிரம் தாழ்த்தியபடி அவ்விடம் வந்து நின்றாள். இதழ் கடித்து சிரம் தாழ்த்தி அவள் நின்றிருந்த கோலம், சுயம்புலிங்கத்திற்கு அவள் தவிப்பை உணர்த்தியது. முதலில் தன் மகனுக்காக, ‘இவதான்யா என...