திருப்பம்-03 மாடிக்கு வந்தவர்கள் பசுமை எழில் கொஞ்சும் சுற்றுப்புறத்தைப் பார்த்தபடி நிற்க, சங்கமித்ராவின் படபடப்பு கொஞ்சம் அதிகமானது. 'என்ன இவங்க எதுமே பேச மாட்றாங்க. எதாது ஆரமிச்சா நானும் பேசுவேன்ல?’ என்று எண்ணியவள், அவனை நோக்க, “ரொம்ப நேரமா என்னையேதேம் பாக்கீய. பேச மாட்டீயளா?” என்று கேட்டான். அவன் கேட்டதில் திடுக்கிட்டவள், “அ..அப்படிலாம் இல்லை” என்று தடுமாற, “ரிலாக்ஸ்” என்று அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “நான் திருமாவளவன். எங்க குடும்பம் ரொம்ப பெருசு. எனக்கு ரெண்டு அக்கா, ஒரு தங்கை, ஒரு ட்வின் பிரதர். குடும்பமா எல்லாருமே சேந்து தொழில் பண்றோம். மூத்த அத்தான் மட்டும் தனியா சூப்பர் மார்கெட் வச்சு நடத்துறாங்க. அக்காங்க ரெண்டு பேருமே பக்கத்துல ஒரே ஊர்லதான் கட்டித்தந்திருக்கோம்” என்று கூற, “த..தெரியுங்க” என்றாள். அவளுக்குப் புரியுமோ? புரியாதோ என்று தனது வட்டார வழக்கை விடுத்து சாதாரணமாகவே பேசினான். பிற இடங்களில் கல்லூரி பயின்று வந்தவனுக்கு அப்படிப் பேசுவதொன்று சிரமமாக இருக்கவில்லை. “இருந்தாலும் என் பக்கமிருந்து நான் சொல்லனும்ல?” என்றவன், “ரொம்ப பெரிய குடும்பமா இருக்கேனு உனக்குக் கண்டிப...
திருப்பம்-02 அந்த அழகிய அளவான வீட்டில் தனதறையில் கண்ணாடி முன் அமர்ந்துகொண்டு படபடக்கும் மனதை சமன் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள், சங்கமித்ரா. அவளுக்கு நகைகளை அணிவித்துக் கொண்டிருந்த சங்கீதா, “ஓய் சங்கு.. என்னடி டல்லடிக்குற?” என்று கேட்க, “பொண்ணு பாக்கும்போது உனக்கு எப்படியிருந்துச்சு சங்கீ?” என்று கேட்டாள். அவள் கேள்வியில் கிளுக்கிச் சிரித்த சங்கீதா, தன் வயிற்றைத் தாங்கிபிடித்தபடி எழுந்து அவள் முன் வந்து அமர்ந்து, அவள் கையில் தங்க வளைகளை அடுக்க, “ப்ச்” என்று அக்காவை முறைத்தவள், புடவைககுத் தோதாக இரண்டு நாட்களாய் அவள் தேடி அலைந்து வாங்கிய கண்ணாடி வளையலை எடுத்து வந்தாள். “சங்கு, அம்மா திட்டுவாங்க” என்று சங்கீதா கூற, “எனக்கு இதான் பிடிச்சிருக்கு சங்கீ” என்றவள், தங்கத்தாலான நான்கு பட்டை வளைகளை எடுத்து, இரண்டு வளைகளுக்கு நடுவே கொஞ்சம் கண்ணாடி வளையலை வைத்து, கைகளில் அணிந்தாள். சங்கீதா தங்கையை புன்னகையாய் பார்க்க, “எப்படி சங்கீ அத்தான ஓகே பண்ண?” என்று கேட்டாள். அப்போதே உள்ளே நுழைந்த அவிநாஷ், “ஏன் பாப்பா? உங்கக்கா என்னை ஓகே பண்ணதுல உனக்கென்ன வருத்தம்?” என்று கேட்க, “ஒரு நல்ல மனுஷன எங்...
Comments
Post a Comment