KINDLE STORIES

 வணக்கம் தங்கம்ஸ் 🥰


எனது கிண்டில் செயலியில் உள்ள கதைகளுக்கான திரிகள் மற்றும் கதை முன்னோட்டம்👇


#மலரே_மௌனமா

#பெண்ணியம்_சார்ந்த_கதை

#காதல்_கதை


மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகளைக் கொண்ட, விறுவிறுப்பான காதல் கதை. அண்ணன் தம்பிகளாய், நாயகர்கள், அக்கா தங்கைகளாய் நாயகிகள்... சகோதரிகள் மேல் காதலில் விழும் நாயகர்கள், சகோதரிகளின் பயம் மற்றும் கடந்தகாலம் அறிந்து, களைகளை அகற்றி காதலில் பயணிக்கச் செய்து, மேன்மையடைய வழிவகுக்கும் கதையே, மலரே மௌனமா?


https://amzn.eu/d/85adCms


#அந்தகார_அணங்கே

#துப்பறிவு_மற்றும்_காதல்_கதை


காவல்துறை நாயகன் யாழ் மித்ரன், மற்றும் ஆசிரியை ரசிகப்பிரியாவிற்கு இடையான காதல், பைரவியின் மர்மம் மற்றும் தேடல் ஆகியவற்றைக் கொண்டு விறுவிறுப்பாக நகறும் கதைக்களமே, அந்தகார அணங்கே.


https://amzn.in/d/5jsh59b


#காந்தனின்_குழவியவள்

#காதல்_மற்றும்_காதல்

#matured_love



தனது வாழ்வில் நடந்த ஒரு அசம்பாவிதத்தால் 'முதிர்ச்சி' என்ற வார்த்தையின் இலக்கணம் கூட அறியாமல் இருக்கும் அப்பாவி நாயகி... (Not cringe heroine🙅‍♀️❌)

தந்தைக்கு அடுத்து தொழிலில் இறங்கி, அதன் பின்னே ஓடிக் கொண்டிருக்கும் சிரிக்க மறந்த நாயகன்...

பேதையின் தாயவள் செயலால் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தினுள் விரும்பியோ விரும்பாமலோ இணைய, அவளைப் பற்றிய உண்மை அறிந்து உறைந்து போனவன், அவளுக்கு காதலோடு முதிர்வையும் கற்றுக் கொடுத்து சுயமரியாதையை ஊட்டி நிலைநிமிரச் செய்யும் Matured love கதையே இது!!!


https://amzn.in/d/364F7cH



#அருவமோ_உருவமோ

#கிரைம்_இன்வஸ்டிகேஷன்

#சஸ்பென்ஸ்_திரில்லர்

#ஹாரர்


திகில், சஸ்பென்ஸ், திரில்லர், லவ்னு எல்லாம் கலந்த ஒரு கதை வேணுமா? வாங்க.. இது உங்களுக்கானதே😍

ஒரு பழைய பங்களாவைச் சுற்றி நடக்கும் மர்மம்/அமானுஷ்யமான விஷயத்தை வச்சு நகரும் கதையில் பல டிவிஸ்ட் அன்ட் டர்ன்ஸோட விறுவிறுப்பாக கதையை கொடுத்துள்ளேன்.


https://amzn.in/d/bsI3RdW


#நிந்தைகளின்_நுட்பமே

#சைகோ_திரில்லர்

#கிரைம்_திரில்லர்


வருடத்திற்கு மூன்றென நிகழும் மர்மமான தொடர் கொ.லையின் ஆதியை அறிந்து அந்தம் படைக்கும் நாயகன் மற்றும் கொ.லையாளிக்கு இடையான வேட்டையே இக்கதை. இடையில் ஒரு அழகான காதலும் கொண்டு, கொலையாளியின் வேட்டையையும் விறுவிறுப்போடு கொடுத்திருக்கின்றேன்.

திரில்லர் பிரிவில் கதை படிக்க விரும்புவோருக்கு நிச்சயம் என்னால் முடிந்தளவு திருப்தியான படைப்பை கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன். 

https://amzn.in/d/f0TVo3z


#லாஜிக்_இல்லா_மேஜிக்_சீரீஸ்_01

#மேதினியின்_கலையோ_நயனங்களின்_பிழையோ

#டைம்_டிராவல்

#science_fiction

#comedy


அகநகை செல்வி, துருவன், ஜான்விகா மற்றும் விஷ்வேஷ்ரன் ஆகிய நான்கு நண்பர்களின் வாழ்வில் ஒரு மாயாஜால சீட்டு நடத்தும் மாய நாடகங்களைக் கொண்டதே இந்த சீரீஸ்.

இதன் முதல் கதையான மேதினியின் கலையோ நயனங்களின் பிழையோ ஒரு 'டைம் டிராவல்' கதையைச் சேர்ந்தது.

2024 ஜனவரி ஒன்று நல்லிரவு பன்னிரெண்டு மணிக்கு புத்தாண்டு கொண்டாடிவிட்டு துயில் கொள்ளும் தோழர்கள் மறுநாள் காலை 2074 திசம்பர் 1ஆம் தேதியில் கண்விழிக்கின்றனர்!

அந்த காலகட்டத்தில் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் எப்படி இருந்தது என்ற கருத்துக்களையும், இரண்டு ஜோடிகளின் காதலையும், கலகலப்பையும், மீண்டும் எப்படி மீண்டு வந்தனர் என்பதையும் கலந்து இக்கதையில் கொடுத்துள்ளேன்.


https://amzn.in/d/6ulcJy1


#லாஜிக்_இல்லா_மேஜிக்_சீரீஸ்_2

#மாயோளின்_அலகனவன்

#காமெடி_கதை


நமது நண்பர்கள் நால்வரில் ஜான் மற்றும் அவளது காதலனான மதிமகிழனின் கதையே இது. முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் காமெடி கதைக்களம்.

கதையோட ஸ்பெஷாலிடியே நம்ம நாயகன் இதில் முதல் மற்றும் கடைசி அத்தியாயத்தில் தான் மனிதனா வருவான்😂 அப்ப மற்ற அத்தியாயங்களில்??? கதையில் படித்துத் தெரிஞ்சுக்கோங்க😉


https://amzn.in/d/bJOLXdv


#லாஜிக்_இல்லா_மேஜிக்_சீரீஸ்_03 (இறுதி பாகம்)

#மறைகை_வேட்டையும்_மதன_காதையும்


இந்த சீரீஸின் இறுதி கதையான மறைகை வேட்டையும் மதன காதையும் கதை, துருவன் மற்றும் இளநகையின் காதல், மற்றும் நமது முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரையும் கொண்ட ஒரு புதையல் வேட்டையோடு பயணிக்கும் கதை.

பல புதிர்களும், நகைச்சுவையும், காதலும், மாயமும் கொண்டு பயணிக்கும் கதை சிரிக்க சிரிக்க படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான ஸ்பெஷல் ட்ரீட்.


https://amzn.in/d/idlHpRv


#கார்கோள்_கொண்ட_குமரியாள்

#இது_ஒருவரலாறு_மீண்டு_வரும்_கதை



நமது தமிழினமும், தமிழ் மொழியும் தோன்றியதாகக் கூறப்படும் குமரிக்கண்டம் என்பது கடலுக்குள் மூழ்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அக்குமரிக்கண்டம் இருந்ததற்கான சான்று வெளியே வந்தால், எப்படியிருக்கும் என்றும், அதன் வரலாறுக்காக போட்டியிடும் அயல்நாட்டினரிடமிருந்து நாம் அதை பாதுகாத்து மீட்க வேண்டிய சூழல் வந்தால் எப்படியிருக்கும் என்பதையும் கூறும் கற்பனைக் கதையே இது.


https://amzn.in/d/bwB8bdw




Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02