8. அந்தமற்ற ஆதரமே

அத்தியாயம்-08 தான் காண்பது கனவா இல்லை நினைவா என்று பரிதவித்த நிலையில் அடாமினா தன் முன் நிற்பவனை வெறித்து நிற்க, அவளை நம்பமுடியாதப் பார்வை பார்த்து நின்றான் ஜான் ஃபேர்லே. அவன் நினைத்தது ஒன்றாக இருக்க நடந்தது வேறாகிப்போனதே! இருவரும் தங்கள் சுற்றம் மறந்த நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அடாமினாவின் மீது நெருப்புப் பந்து ஒன்று வீசப்பட்டது. அதில் பொத்தென அவள் கீழே விழவும் சுயம் பெற்றவன் தனக்குப் பக்கவாட்டில் திருப்பிப் பார்க்க, அடுத்தப் பந்தை வீச தன் கைகளை உயர்த்தினாள் டைஸா. "நோ டைஸா.." என்று அவளைத் தடுத்து நிறுத்தி பரிதவிப்போடு பார்த்தவன், "எ.. என் ஏஞ்சல்" என்று கண்கள் பனிந்து குரல் கரகரக்கக் கூறினான். அதில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற டைஸா, "அ..அடாமினா?" என்று வினவ, ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தான். இங்கு கீழே விழுந்த அடாமியைக் கண்டு பதைபதைத்து வந்த அலாஸ்கா, "அடாமி.." என்க, சோர்ந்த விழிகளோடு அவளை ஏறிட்டாள். அப்போது அவர்களை நோக்கி வந்த பனிக்கத்தியைத் தன் நெருப்பால் உருக்கிவிட்டுத் திரும்பிப் பார்த்த சைரா, "என்ன பண்றீங்க? ...